ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா செல்லும் ரஜினி… ஒருவழியா கோபம் தணிந்ததா?
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடாந்திர சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.

பிரிந்தனர்
காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஆண்டு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்களின் பிரிவு அறிவிப்பு ரசிகர்களை மட்டுமில்லாது ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரிவுக்கான காரணம் தெரியாமல் இவர்கள் இருவர் குறித்து பல விதமான வதந்திகள் பரவின.

மனவேதனையில்
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா சாதாரண குடும்ப சண்டைதான் இவர்கள் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என கூறியதாக செய்திகள் வெளிவந்தன. ரஜினி, பல முறை தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தும் தனுஷ் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரஜினி மனவேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா மீது கோபத்தில்
மகள் ஐஸ்வர்யா மீதும் ரஜினி கோபத்தில் உள்ளார். இரண்டு குழந்தைகள் இருக்கும் போது இப்படி ஒருமுடிவை எடுத்ததில் ரஜினிக்கு சிறிதும் விருப்பம் இல்லாததால், அவர் ஐஸ்வர்யாவிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி எங்கு சென்றாலும் உடன் செல்லும் ஐஸ்வர்யா சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியின் போது கூட, ரஜினியுடன் அவர் வரவில்லை.

குடும்பத்துடன்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த்துடன் அவருடைய மனைவி, மகள் ஐஸ்வர்யா, பேரன்களுடன் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீண்ட நாட்களாக மகளிடம் பேசாமல் இருந்த ரஜினி, ஐஸ்வர்யா மீது இருந்த கோபம் தற்போது குறைந்துள்ளது

தலைவர் 169
பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து பின்னர் ரஜினியுடன், அவர்கள் அனைவருடனும் சென்னை திரும்ப உள்ளார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கும் தலைவர் 169 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











