ஜெயிலர் வில்லன் விநாயகத்தை தொட்டுக் கும்பிட்ட ரஜினிகாந்த்.. சூட்டிங் ஸ்பாட்டில் தலைவர் இப்படியா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தனது பொன் விழா ஆண்டை அதாவது 50வது ஆண்டினைக் கொண்டாடவுள்ளார். இந்த ஆண்டு இவரது நடிப்பில் ரிலீஸ் ஆகவுள்ள படங்களில் இப்போதைக்கு கூலி படம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50வது ஆண்டு என்பதால், இரண்டு படங்களை தனது நடிப்பில் ரிலீஸ் செய்ய சூப்பர் ஸ்டார் முடிவெடுத்துவிட்டதாக ஒரு பேச்சு திரைத்துறை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகின்றது. இப்படியான நிலையில், ஜெயிலர் 2 படத்தினை இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, இந்த ஆண்டு இறுதியில் அவரது பிறந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொள்ளும் விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ளார். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம் ஆகும். இந்தப் படத்தில் இவருடன் தென்னிந்திய பிரபலங்கள் தொடங்கி, பாலிவுட் ஸ்டார் அமீர் கான் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்க்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது.

rajinikanth jailer vinayakan

ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும், தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களை மதிக்கின்ற அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கின்றவராக உள்ளார். மேலும், தான் நடிக்கும் படத்திலும் சரி தயாரிக்கும் படங்களிலும் சரி, எக்காரணம் கொண்டும், எந்த ஒரு நடிகரும், கலைஞரும் அவமரியாதையைச் சந்தித்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் அக்கறையாகவும் இருக்கக்கூடியவர். இவர் படப்பிடிப்புத் தளத்தில் நடந்துகொள்ளும் விதம் பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

வணங்குதல்: அதாவது, இது தொடர்பாக, படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில், ஒரு காட்சியில் வில்லன் நடிகர் விநாயகனை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எட்டி உதைக்க வேண்டும். அந்த காட்சி பல டேக்குகளில் பல ஏங்கில்களில் காட்சியாக்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் வில்லன் நடிகர் விநாயகன் மீது காலை வைத்துவிட்டு எடுக்கும்போது எல்லாம், அவரைத் தொட்டு வணங்கினார்.

பழக்கம்: இந்தப் படத்தில் மட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் தான் நடிக்கும் படங்களில் யார் மீது தனது கால் பட்டாலும் அவர்களைத் தொட்டு வணங்கிவிட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என கேட்டுக் கொள்கின்றார். இவரது இந்த குணம் சினிமா உலகில் பலரிடம் இல்லாதது" என அவர்கள் பேசியுள்ளார்கள். இந்தத் தகவல் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் சூப்பர் ஸ்டாரைப் பார்த்து பல நடிகர்கள் இது போன்ற பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X