Vettaiyan: ச்சீ.. இப்படியா நடந்துக்கனும்.. இணையத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ரஜினி ஹேட்டர்ஸ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த அடையாளம். 2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அவரது 50வது ஆண்டினை அடியெடுத்து வைக்கவுள்ளார். இதுவரை அவரது நடிப்பில் 170 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. வேட்டையன் அவரது 170வது படம். அதேபோல் தற்போது கூலி படத்திலும் நடித்து வருகின்றார். 171வது படமான கூலி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயிலர் 2 படத்தினையும் ரிலீஸ் செய்ய சூப்பர் ஸ்டார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இன்று அவரது வேட்டையன் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அவரைப் பிடிக்காத இணையவாசிகள் மிகவும் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர். இது குறித்து பார்க்கலாம்.
வேட்டையன் படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 170வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,மலையால சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

படம் பார்த்த பலரும் படத்தினைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பல முன்னணி விமர்சகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்களும் படத்தினை பாராட்டி வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள், படத்தினை ஒட்டுமொத்த இந்திய மக்களும் பார்க்க வேண்டும். படத்தில் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தக்கூடிய மாஸ் காட்சிகளும் உள்ளது. அதேபோல், ஜெய் பீம் படத்தினை இயக்கிய இயக்குநர் ஞானவேல் படத்தினை இயக்கியுள்ளதால், படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்தும் இருக்கின்றது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வன்மம்: படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் அதாவது நேற்றைய தினத்தில் இருந்தே இணையத்தில் விஜய் ரசிகர்களும் சூர்யா ரசிகர்களும், வேட்டைய்ன் படம் தோல்விப்படம், வேட்டையன் டிசாஸ்ட்டர் என்பது போன்ற ஹேஷ் டேக்குகளை ட்ரெண்ட் செய்து வந்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ரஜினியின் வேட்டையன் படமும் அதே தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதனால் கங்குவா நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

அநாகரீகம்: அதேபோல் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இணையத்தில் ஏற்படும் வாக்குவாதத்தின் வெளிப்பாடாகவும் நேற்றைய சம்வங்கள் அமைந்தது. ஆனால் இன்றைக்கு, ரஜினிகாந்த் ஹேட்டர்ஸ் இணையத்தில் மிகவும் கேவலமாக, அநாகரீகமாகவும் கொச்சையாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது வேட்டையன் படம் குறித்து மிகவும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் செயலைப் பார்க்கும்போது மிகவும் அருவெறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இது போல பதிவிட்டு வருபவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய், சூர்யா: வேட்டையன் படம் பார்த்த சூர்யா, 'படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகளும், ஞானவேலின் சமூக அக்கறையுமாக நிறைந்துள்ளது. அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஞானவேல் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் வேட்டையன் படத்தினை சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் நடிகர் விஜய் பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











