Jailer 2: ரஜினிகாந்த்க்கு டூப் போட்டாங்களா? சொன்னவங்க வாயில ஒரே மிதி.. வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் என்றால் அது கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில், சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டர் ரஜினிகாந்த், மோகன் லால், சிவ்ராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்தப் படம் உருவாகி இருந்தது. படம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மாஸான காட்சிகளும் அதற்கு ஏற்ற பின்னணி இசை ஆகியவை படத்தினை வேற லெவலில் ஹிட்டாக மாற்றியது. படம் வசூலில் தாறுமாறாக வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கார் பரிசாக வழங்கினார்.

rajinikanth jailer 2 2

ஜெயிலர் : படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தது. படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா அட்டகாசமான நடனமாடினார். அவர் நடனமாடிய பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஜெயிலர் படத்தின் மாஸான வெற்றிக்குப் பின்னர், ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்து. எனவே படக்குழுவும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்க முடிவு செய்தார்கள். ஜெயிலர் படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று படங்களில் கமிட் ஆகி அதில் இரண்டு படங்கள் ரிலீஸும் ஆகிவிட்டது. லால் சலாம் படத்தில் ஒரு எக்ஸ்டண்டேட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

rajinikanth jailer 2 2

ஜெயிலர் 2 : அதேபோல் வேட்டையன் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. கூலி படத்தில் நடித்து வருகின்றார். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இதற்கிடையில் கடந்த ஆண்டில் சூப்பர் ஸ்டாரின் 74வது பிறந்த நாளில் ஜெயிலர் 2 குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 குறித்த அறிவிப்புகள் நேற்று முன் தினம் அதாவது மாட்டுப்பொங்கல் அன்று ப்ரோமோ வெளியானது. ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

rajinikanth jailer 2 2

பதிலடி : இப்படியான நிலையில் ப்ரோமோவில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை, அவருக்கு பதிலாக வேறு யாரையோ டூப் போடச் சொல்லி ப்ரோமோவை எடுத்துள்ளார்கள் என சில விமர்சகர்கள் விமர்சித்தனர். தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப்ரோமோ மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X