அரிவாளுடன் கெத்துகாட்டும் ரஜினி.. ஜெயிலர் மேக்கிங் வீடியோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜெயிலர் படத்தை பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜெயிலர் படத்தை தயாரித்து வருகிறது. அண்ணன் தங்கை சென்டிமெண்ட் கதையான அண்ணாத்த படம் கணிசமான வசூலை பெற்ற போதும், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், ரசிகர்கள் நொந்து போனார்கள்.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால், பல இயக்குநர்களிடம் கதை கேட்டு இறுதியாக நெல்சன் திலீப்குமாரை தேர்வு செய்தார். ரஜினி படத்தை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது நெல்சன் இயக்கிய டாக்டர் படம் சூப்பர் ஹிட்டடித்தது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

ஆனால், பேச்சுவார்த்தை நடந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போது பீஸ்ட் படம் வெளியாக, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால், இயக்குநர் மாற்றப்படலால் என்ற பேச்சுக்களும் எழுந்தன. ஆனால், எந்த மாற்றமும் இல்லால் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னணி இயக்குநர்கள்

முன்னணி இயக்குநர்கள்

தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், படையப்பா படத்தில் ரஜினியுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறது. மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெரிப், தரமணி பட நடிகர் வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர்.

மேக்கிங் வீடியோ

மேக்கிங் வீடியோ

ஜெயிலர் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அரிவாளுடன் ரஜினிகாந்த் மிரட்டலாக இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X