Rajini speech: அவங்களை சோகமா பார்க்க முடியவில்லை… கலாநிதி மாறனிடம் கோரிக்கை வைத்த ரஜினி!

சென்னை: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறனின் கோரிக்கை வைத்தார்.

பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள படம் ஜெயிலர். ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், சுனில், ஜாக்கி ஷெரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Super Star Rajinikanth made the request of Kalanithi Maran at jailer audio launch

ஆகஸ்ட் 10ந் தேதி ரிலீஸ்: அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், ஹாலிவுட் படத்தில் வருவது போன்று ராக்கெட் லாஞ்சர் வைத்து வெடிக்க வைக்கும் கட்சியுடன் வெளியாகி உள்ள டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜெயிலர் இசைவெளியீட்டு விழா: இதையடுத்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதம் வெளியான நிலையில், ஜெயிலர் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பேசிய ரஜினிகாந்த், கலாநிதி மாறன் ஒரு திறமையான மனிதர், முகேஷ் அம்பானி போல வருவதற்கு அவருக்கு திறமையானவர். 10மணிக்கு வருகிறேன் என்றால், சரியாக அத்தனை மணிக்கு வந்து நிற்பார். அந்த அளவுக்கு கடுமையான உழைப்பாளி.

கலாநிதி மாறனுக்கு வேண்டுகோள்: கலாநிதி மாறனிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த முறையாவது நல்ல வீரர்களை கொடுங்க. ஐபிஎல்ல சன்ரைசர்ஸ் அணி சரியாக விளையாடாத போது காவ்யாவின் சோகமான முகத்தை டிவியில் பார்க்கமுடியவில்லை, என்றார்.

காக்கா கழுகு கதை: அதேபோல, பறவைகள் சேட்டை செய்யும், காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் தாவிக் கொண்டும் பறந்து கொண்ட இருக்கும். ஆனால், கழுகு மிக உயர பறந்து கொண்டிருக்கும். கழுகு உயரத்தில் பறப்பதை பார்த்த காகம் தானும் பருந்தை போல பறக்க வேண்டும் என்ற ஆசையில், மேலே பறந்து சென்று கழுகை கொத்தும். ஆனால், கழுகு மீண்டும் மேல பறக்கும் என்று குட்டி கதையை சொன்னார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X