Rajinikanth: சூப்பர் ஸ்டாருக்கு கோவில் கட்டிய ராணுவ வீரர்.. நேரில் வரவழைத்து அன்பைப் பகிர்ந்த ரஜினி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். அவரைப் பார்த்து, தங்களது வாழ்க்கையில் முன்னேறிய பலர் உள்ளனர். அந்த அளவிற்கு பலருக்கும் உத்வேகமாக ரஜினிகாந்த் இருந்துள்ளார். பஸ் நடத்துநராக இருந்து, நடிப்பின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை, வெளிக்காட்ட பல்வேறு முய்றசிகளை மேற்கொண்டு, படிப்படியாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இப்படியான நிலையில் மதுரையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர், கார்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கோவில் அமைத்து, வழிபட்டு வருகின்றார். அவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்தி அனுப்பியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற தலைவர் நிரந்தரம் பாடலில் வரும் வரிகளைப் போல், குட்டிச் சுவற்றை எட்டிப் பார்த்தால் உசுரைக் கொடுக்க கோடி பேரு எனும் வரிகளுக்கு ஏற்ப, இவருக்காகவே தங்களது வாழ்க்கையை முழுவதும் மாற்றிக்கொண்ட ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் அவரது வீட்டின் முன் குவிந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் எண்ணற்ற ரசிகர்கள் ஆண்டுதோறும் இதனைச் செய்து வருகின்றார்கள். அதேபோல், புத்தாண்டு, பொங்கல் என அனைத்து நல்ல நாட்களிலும் சூப்பர் ஸ்டாரைப் பார்த்து அவரது ரசிகர்கள் வாழ்த்து பெறுவது என்பது நடைபெற்று வருகின்றது.

rajinikanth rajinikanth temple madurai

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ரசிகர்களை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரவழைத்து அவர்களை தனது ராகவேந்திரா மண்படத்தில் சந்தித்து, அவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தீவிர ரசிகர்கள்: இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் அவருக்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் ஸ்டார் படத்தில் பேசும் வசனங்கள், பாடல்கள், பாடலில் உள்ள வரிகளை எல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அதுதான் வாழ்க்கை என வாழ்ந்துகொண்டு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். இணையத்தில் இப்போதும் ஒரு வீடியோ உலா வரும். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களில் ஒருவர், “ வெளியே வா என் தெய்வமே.. என் சாமி..” எனக் கத்துவார். அவர் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல.

கோவில்: ஆமாம், மதுரையைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரர், கார்த்திக் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர். இவர் மதுரையில் உள்ள தனது சொந்த ஊரான, திருமங்கலத்தில் ஸ்ரீ ரஜினிகாந்த் கோவிலைக் கட்டியுள்ளார். 300 கிலோ கருங்கல்லால் செதுக்கப்பட்ட 3.5 அடி உயர ரஜினிகாந்த் சிலை அந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கார்த்திக் ரஜினிகாந்த்திற்கு கோவில் கட்டிய சம்பவம் இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் கார்த்தியிடம் பேட்டி எடுத்தார்கள். மதுரையைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், மதுரை செல்லும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த கோவிலுக்கு செல்கின்றார்கள்.

சந்திப்பு: இப்படியான நிலையில் தனது, முன்னாள் ராணுவ வீரர் கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் தனது இல்லத்திற்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவர்களுடன் நீண்ட நேரம் பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் தனது இல்லத்தை சுற்றிக் காட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X