Rajinikanth: புத்தாண்டு வாழ்த்துனா இப்படி சொல்லனும்.. தலைவர் வேற லெவல் எனர்ஜி.. ரசிகர்கள் ஜமாய்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தின் முன் அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியதால், அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல, ரஜினிகாந்த் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து கையசைத்து, வணக்கம் சொல்லி, கையெடுத்து கும்பிட்டு தனது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தார். ரஜினிகாந்த்தைப் பார்த்ததும் ரசிகர்கள் தலைவா.. தலைவா.. ஹேப்பி நியூ இயர் என கத்தினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்தார்.
இப்போது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும் புத்தாண்டு என்றால் இப்படி இருக்கனும் எனவும், புத்தாண்டு வாழ்த்து என்றால் இப்படி சொல்லனும் எனவும் பதிவிட்டு வருகின்றார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ரஜினி 50: கடந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களிலும் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரங்கள் பாராட்டிப் பேசப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டில் அதாவது 2025ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் இரண்டு படங்கள், அதாவது கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததே, சூப்பர் ஸ்டார்தான் என கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதால், இந்த முடிவினை அவர் எடுத்ததாக ஒரு பேச்சு உள்ளது.

கூலி: தற்போது கூலி படத்தில் தீவிரமாக நடித்து வருகின்றார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் தனது பிறந்த நாளில் கூட, கூலி படப்பிடிப்புத் தளத்தில் தான் இருந்தார். அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் படத்தினை விரைவில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்து வருகின்றார்.

ஏமாற்றம்: வழக்கமாக சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல, அவரது ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரள்வது வழக்கம். ஆனால் இந்தமுறை ரசிகர்களை வரவேண்டாம் எனக் கூறியும், ரசிகர்கள் வீட்டின் முன் திரண்டு ஏமாந்து போனார்கள். எனவே, புத்தாண்டில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்க கூடாது என ரஜினிகாந்த், ரசிகர்களைக் காண வீட்டில் இருந்து வெளியே வந்து கை அசைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











