Rajinikanth: அமெரிக்காவுக்கு போகும் ரஜினிகாந்த்? பிறந்த நாளுக்காகத்தான் வெயிட்டிங்.. நல்லதே நடக்கனும்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஒட்டி தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக அடுத்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதை அடுத்து அவர் ஜெயிலர் டு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது செய்யாறு பாலு தெரிவித்துள்ள தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டையன். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. ஞானவேல் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக வேட்டையன் படம் நீட் தேர்வு மற்றும் அதைச் சுற்றி நடக்கின்ற அரசியல் அதேபோல என்கவுண்டர் மூலம் என்ன நடக்கின்றது என்பதை எடுத்துரைக்கும் படமாக அமைந்தது.

rajinikanth cheyyaru balu coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கும் அனிருத் இசை அமைக்கின்றார். கூலி படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் ரஜினிகாந்த் தான் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த தனது இதய அறுவை சிகிச்சையை சென்னை அப்போலோ மருத்துவமனையில் செய்து கொண்டார்.

கூலி: மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக தொடக்கத்தில் வழக்கமான பரிசோதனை தான் எனக்கு கூறிவிட்டு அதன் பின்னர் அறுவை சிகிச்சை எனக் கூறியதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி மேலும் அதிகரித்தது. கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிரமமான காட்சிகளை கொடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதி ஆக முக்கிய காரணம் என சிலர் வதந்திகளை பரப்பினர். ஆனால் இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் பேசுகையில், தனது அறுவை சிகிச்சை தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்களிடம் சில மாதங்களுக்கு முன்பே கூடிவிட்டதாகவும் அதற்கு ஏற்ற வகையில் படப்பிடிப்பு நாட்களை நாங்கள் திட்டமிட்டு கொண்டதாகவும் கூறிய பின்னர் தான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

ஜெயிலர் 2: வரும் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 74 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆக உள்ளது என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் ஆவல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் படமாக மாறிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் ஆக உள்ளது என்ற தகவல் ஏற்கனவே சினிமாவுலகில் பேசப்பட்டு வருகிறது.

rajinikanth cheyyaru balu coolie

அமெரிக்கா: இப்படியான நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசுகையில் ரஜினிகாந்த் தனது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சுமார் மூன்று மாத காலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க உள்ளார் என கூறியுள்ளார். தனது முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், உடல் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் செய்யார் பாலு தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X