பாரியை வாழ்த்திய ஜானி.. கடைசி 40 நிமிடம் சூப்பர்.. ரெட்ரோ படத்தை பாராட்டிய ரஜினி!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், ரெட்ரோ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை வெகுவாக பாராட்டியதாக கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தில், சூர்யா ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ஜோஜு ஜார்ஜ், நாசர், கருணாகரன், சிங்கம் புலி, பிரகாஜ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ரெட்ரோ படத்தின் டீசர் வெளியான போதே, இதன் கதைக்கரு என்னவாக இருக்கும் என படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர். அதோடு மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் இருந்து வெளியான கனிமா, கண்ணாடி பூவே பாடல் படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகரித்தது.

ரெட்ரோ படம்: படம் மே 1ந் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளி வருகிறது. மேலும், படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் சூர்யா அதிரடி காட்டி நடித்து இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல, இத்திரைப்படம் சூர்யாவின் கேரியரில் சிறப்பான படமாக இருக்கும் என பலர் படத்தை புகழ்ந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு, பாராட்டியதாக கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடைசி 40 நிமிடம்: அதில், தலைவர் ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டார்.. அவர் என்னிடம் சொன்னதை நான் இதில் பதிவிட்டு இருக்கிறேன். மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள்.. சூர்யாவின் நடிப்பு சூப்பர்... படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தது. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். ரஜினியின் வாழ்த்தைக் கேட்ட பிறகு தனது கால்கள் தரையிலேயே இல்லை, நான் இப்போது பறப்பது போல உணர்கிறேன்... லவ் யூ தலைவா என பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், பாரியை வாழ்த்திய ஜானி என போட்டு சூர்யா, ரஜினி இருவரும் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளித்திருந்த கார்த்திக் சுப்புராஜ், 'ரெட்ரோ' கதை ரஜினி சாருக்காக எழுதியது தான். அந்தக் கதையில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கும். அந்தக் கதையே எனக்கு காதல் கதையாக மாற்றவேண்டும் என்று தோன்றியது. ஆகையால், காதல் கதையாக மாற்றி எழுதி வைத்தேன். அப்போது, சூர்யா சார் கதை ஏதும் இருக்கிறதா என்று கேட்டதும், இந்தக்கதை அவருக்கு சரியாக இருக்கும் என நினைத்துக் கொடுத்தேன். சூர்யாவும், கதையை படித்துவிட்டு இது ரஜினி சாருக்காக எழுதினீர்களா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன் என்று அந்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











