முத்து படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாதுனு சூப்பர் ஸ்டார் சொன்னாரு - ரமேஷ் கண்ணா பேச்சால் பரபரப்பு!

By Mohan Raj

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு தமிழில் வெளிந்த திரைப்படம் முத்து. இந்த படத்தை இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில், மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் இன்றைக்கும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக உள்ளது.

முத்து திரைப்படம் மலையாளத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான தேன்மாவின் கொம்பது படத்தின் மையக்கருத்தை கொண்டு வேறுவிதமான திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் என படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் முத்து திரைப்படத்தில் நடித்ததற்காக 1996ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைபட விருதுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அதேபோல் ஜப்பான் மொழியில் ஜப்பானில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் முத்து படம் பெற்றது.

Super Star Rajinikanth Urvashi Muthu Movie Ramesh Khanna K S Ravikumar A R Rahman

முத்து திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மாஸான விருந்து கொடுத்திருந்ததால், முத்து திரைப்படம் இன்றைக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் டி.ஆர்.பி., ரேட்டிங் உச்சம்தான். படத்தில் மெஹா ஹிட் பாடல்கள், எப்போது ஒளிப்பரப்பினாலும் சலிப்புத் தட்டாத காமெடிகள், அட்டகாசமான திரைக்கதை என படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக உருவாக்கி உள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.

Super Star Rajinikanth Urvashi Muthu Movie Ramesh Khanna K S Ravikumar A R Rahman

கே.எஸ். ரவிக்குமார் என்றாலே தமிழ் சினிமா உலகில் அவரது உதவி இயக்குநர் ரமேஷ் கண்ணா குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கே.எஸ். ரவிக்குமாரின் படங்களில் ரமேஷ் கண்ணாவின் பங்களிப்பு இருக்கும்.

Super Star Rajinikanth Urvashi Muthu Movie Ramesh Khanna K S Ravikumar A R Rahman

ரமேஷ் கண்ணா பேட்டி: இந்நிலையில் ரமேஷ் கண்ணா பிரபல யூட்டூப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டி ஒன்றில் முத்து படம் உருவாக்கத்தின்போது நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்து படத்தில் நடிகை ஊர்வசி நடிக்கவே கூடாது என மிகவும் கறாராக இருந்தது மட்டும் இல்லாமல், அதனை ஊர்வசிக்கே போன் செய்தும் சொல்லியதாக கூறியுள்ளார்.

Super Star Rajinikanth Urvashi Muthu Movie Ramesh Khanna K S Ravikumar A R Rahman

அதாவது முத்து திரைப்படத்தில் சரத் பாபுவுக்கு ஜோடியாக வரும் ராதாரவின் மகள் கதாப்பாத்திரமான பத்மினி காதாப்பாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது நடிகை ஊர்வசியைத்தான். விளையாட்டுத்தனமான குறும்புக்கார பெண் கதாப்பத்திரத்திற்கு ஊர்வசி கச்சிதமாகப் பொருந்திப்போவார் என ரமேஷ் கண்ணா உள்ளிட்ட உதவி இயக்குநர்கள் முடிவு செய்து, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறி, ஊர்வசியை ஓ.கே. செய்துள்ளனர்.

ஊர்வசி நடிக்கவே கூடாது: ஆனால், இதனைக் கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், " ஊர்வசி இப்பத்தான் நல்லா வளர்ந்து வந்துட்டு இருக்காங்க, அவங்களப்போய் இந்த மாதிரி துணைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பது சரியாக இருக்காது. இந்த கதாப்பாத்திரம் கதைக்கு முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரம். எனவே ஊர்வசி இந்த படத்துல வேண்டாம் என படக்குழுவிடம் திட்டவட்டமாக கூறியது மட்டும் இல்லாமல், தானே ஊர்வசிக்கு போன் செய்து பக்குவமாக எடுத்துக் கூறியுள்ளார்." இவ்வாறு அந்தப் பேட்டியில் ரமேஷ் கண்ணா கூறியுள்ளார். ரமேஷ் கண்ணாவின் இந்த பேட்டி குறித்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X