twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி வெளியிட்ட… எம்.எஸ்.தோனியின் “அதர்வா: தி ஆரிஜின்’’ கிராஃபிக் நாவல் !

    |

    சென்னை : எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா: தி ஆரிஜின்'முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

    Super Star rajinikanth Releases ms dhoni s atharva the origin book

    ரஜினி,ஆஜித், விஜய்,தனுஷ்,சூர்யா போன்ற நடிகர்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு கிரிக்கெட் வீரம் மகேந்திரசிங் தோனிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்.எஸ்.தோனி நடித்த புதிய யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா தி ஆரிஜின்' மாய உலகத்தை உருவாக்க பல ஆண்டுகளாக விடாமுயற்சியுட பணியாற்றியுள்ளனர்.

    இந்த கிராஃபிக் நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதி, திரு. எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், திரு. வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு. அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட வாழ்க்கைப் படங்கள் உள்ளன.

    Super Star rajinikanth Releases ms dhoni s atharva the origin book

    ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்ப்பட்ட எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா: தி ஆரிஜின்' முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த நாவலை Amazon.in தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு மூலம் ஆர்டர் செய்யலாம் என்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும்.

    Super Star rajinikanth Releases ms dhoni s atharva the origin book

    நாவல் குறித்து பேசிய தோனி, உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதை மற்றும் அதிவேகமான கலைப்படைப்புகளுடன் கூயி வசீகரிக்கும் கிராஃபிக் நாவலாகும்.இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகருக்கும் மேலும் பலவற்றைத் நிச்சயம் தேடித்தரும் என்றார்.

    English summary
    Super Star rajinikanth Releases ms dhoni s atharva the origin book
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X