சூப்பர்ஸ்டாரின் அதிரடி அண்ணாத்த... ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த ட்ரெயிலர்!

சென்னை : சூப்பர்ஸ்டாரின் அதிரடி சரவெடியாக தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது அண்ணாத்த படம்.

Recommended Video

ANNATHE - Official Trailer Review | Rajinikanth, Nayanthara, Siruthai Siva

இந்தப் படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் சிவா,

நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில் ஒரே நாளில் 5 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி, சதீஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராகியுள்ளது அண்ணாத்த. இந்தப் படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன.

ட்ரெயிலர் ரிலீஸ்

ட்ரெயிலர் ரிலீஸ்

இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தீபாவளியையொட்டி படம் இன்னும் 7 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தை பார்க்க மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரெயிலர் இதை மேலும் அதிகரித்துள்ளது.

கமர்சியல் சரவெடி

கமர்சியல் சரவெடி

கடந்த பேட்ட உள்ளிட்ட படங்களில் கேங்ஸ்டராக வித்தியாசமான ரோல்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் பழைய ரஜினியை மீண்டும் ரசிகர்களிடையே கொண்டுவந்துள்ளது. இந்த மேஜிக்கை இயக்குநர் சிவா மீண்டும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

சிறப்பான காட்சிகள்

சிறப்பான காட்சிகள்

படத்தில் 4 நாயகிகள் நடித்துள்ள நிலையில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் மிகவும் கலர்புல்லாக உள்ளது. மேலும் நயன்தாராவுடனான காட்சிகளும் சிறப்பா அமைந்துள்ளது. குஷ்பூ, மீனா தோன்றும் காட்சிகளும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சிகர்கள் உற்சாகம்

சிகர்கள் உற்சாகம்

சூப்பர்ஸ்டாராக ரஜினி ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிலைக்க முத்து, பாட்ஷா போன்ற படங்கள் மிகவும் சிறப்பாக கைகொடுத்தன. இந்தப் படத்தின் கமர்ஷியல் அம்சங்கள் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது அதே உற்சாகத்துடன் ரஜினியை இந்தப் படத்தில் காண முடிகிறது.

திரையரங்குகளில் அண்ணாத்த

திரையரங்குகளில் அண்ணாத்த

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை இத்தகைய கமர்ஷியல் படத்தில் அதிரடி சரவெடியாக பார்ப்பது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீபாவளி ரிலீசாக நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் படத்தை திரையரங்குகளில் காண அவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளிக் கொண்டாட்டம்

கொரோனா பாதிப்பு சிறிதளவு உள்ள போதிலும் இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அண்ணாத்த படமும் அதற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று நம்பலாம். படத்தின் பிரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

5 மில்லியன் பார்வைகள்

5 மில்லியன் பார்வைகள்

படத்தின் 4 பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. டீசரும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ட்ரெயிலர் ஒரே நாளில் 5 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது படக்குழுவினரை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. சூப்பர்ஸ்டார் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போது மிகுந்த வரவேற்பு காணப்படும். அந்த வகையில் இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றி பெறும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X