ரீ ரிலீஸான பாபா வசூலில் கெத்துக்காட்டியதா? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா நேற்று ரீ ரிலீஸாகி உள்ள நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2002ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து தயாரித்த திரைப்படம் பாபா.
இப்படத்தில், ரஜினிகாந்த், மணிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, எம்.என்.நம்பியார், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா, சீமா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்த நிலையில் வெளியான திரைப்படம் தான் பாபா. இந்த படம் வெளியான போது திரையரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியினர், திரையரங்கை சூறையாடினர், பாபா பட பெட்டியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவங்களால் ரஜினி அதிருப்தியில் இருந்தார்.

7 மந்திரங்கள்
பாபா படத்தின் கதை சற்று வித்தியாசமாகவே இருந்தது எனலாம், இந்த படத்தில் நாத்திகராக இருக்கும் ரஜினியின் முன் பாபாஜி தோன்றி 7 மந்திரங்களை கொடுக்கிறார். ஆனால், நாத்திகரான ரஜினி அந்த மந்திரத்தை சோதனை செய்து பார்த்து வீணாக்கி விடுகிறார். கடைசியாக அவருக்கு இறைவன் மீது நம்பிக்கை வந்ததா? இல்லையா? என்பது தான் கதை.

திருப்தி படுத்தவில்லை
ஸ்டைலான ரஜினியை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி படுத்தவில்லை. அதுமட்டும் இல்லாமல், பாமகவின் ரகளை ஒருபக்கம் இருந்ததால், இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி திருப்பி கொடுத்தார்.

பாபா ரீ ரிலீஸ்
இந்நிலையில், பாபா நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் புது பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் நேற்று வெளியாகி உள்ளது. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங், அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி இருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு மீண்டும் திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் படம் வேறவெலல் என்றும், தரமான படம் என்று புகழ்ந்தனர்.

முதல் நாள் வசூல்
அது மட்டும் இல்லாமல் ஒரு சில ஊடகங்கள் பாபா ரீ ரிலீஸ் பற்றி விவாதம் செய்து நேற்றைய பொழுதை கழித்தனர். இந்நிலையில், ரீ ரிலீசான பாபா திரைப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. 10 வருடத்திற்கு பிறகு வெளியாகி உள்ள இந்த படத்திற்கு இந்த வசூல் மிகப்பெரிய விஷயம் என்றாலும்,சோஷியல் மீடியாவில் கொடுத்த அலப்பறைகளை பார்க்கும் போது இது சற்று குறைவு தான்


Click it and Unblock the Notifications











