கபாலிக்கு அப்புறம் தர்பார் தான்.. டிரெண்டாகும் தர்பார் விமான போஸ்டர் விளம்பரம்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் பட போஸ்டர்கள் விமானங்களில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு முதன்முறையாக இதுபோன்ற பிரம்மாண்ட விளம்பரம் செய்யப்பட்டது.

இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார் படத்துக்கும் விமானங்களில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

தர்பார் போஸ்டர்கள் ஒட்டிய விமானங்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

தர்பார் ஃபீவர்

சூப்பர்ஸ்டாரின் தர்பார் திரைப்படம் வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ளன. 2020 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே ரஜினியின் தர்பார் ரசிகர்களை ஈர்க்க ரெடியாகி விட்டது. இந்நிலையில், விமானத்தில் தர்பார் போஸ்டர் விளம்பரங்களை பார்த்த ரஜினி ரசிகர்கள், தர்பார் ஃபீவர் ஸ்டார்ட்ஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தர்பார் ஃபிளைட்

தர்பார் ஃபிளைட் ரெடியாகி வருகிறது. விரைவில் வானில் ரஜினி ரசிகர்களுக்காக பறக்கவுள்ளது என்பதை இந்த ரசிகர் தர்பார் ஃபிளைட் ஆன் தி வே எனக் குறிப்பிட்டுள்ளார்.

கபாலிக்கு பிறகு

கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி பட புரொமோஷன் விமானத்தில் கொடி கட்டி பறக்கிறது என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

ஃபிளைட்ல தர்பார் பாருடா

ரஜினியின் தர்பார் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என சொல்லும் நபர்களுக்கு, ஃபிளைட்ல தர்பார் பாருடா என அந்த ரசிகர் பதிலடி கொடுத்துள்ளார்.

வாயை மூடிட்டு இருக்கணும்

ரஜினி ஹேட்டர்கள் இனிமேல் வாயை மூடிட்டு இருக்கணும் என வடிவேலும் இந்த போட்டோவை போட்டு பதிலடி கொடுத்துள்ளார் இந்த ரஜினி ரசிகர்.

சன் பிக்சர்ஸ் vs லைகா

தலைவர் 168 குறித்த அப்டேட்களையும் புரொமோஷன் வேலைகளையும் சன் பிக்சர்ஸ் தீயாய் செய்கிறது. ஆனால், தர்பார் புரொமோஷனை லைகா கண்டுகொள்ளவே இல்லை என்று சொன்னவர்கள் இப்போது என்ன செய்யப் போகின்றனர். நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா என சன் பிக்சர்ஸ் vs லைகா மீமை இந்த ரசிகர் போட்டுள்ளார்.

வெறித்தனம்

2020 பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ள தர்பார் படத்திற்கான புரொமோஷன் கபாலி படத்தை போலவே விமானத்தில் மிக பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இது தான் ப்யூர் வெறித்தனம் என ரஜினி ரசிகர்கள் #DarbarFlight ஹாஷ்டேக்கை கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X