twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆபிஸ் மட்டுமல்ல பதக்கம் வெல்வதிலும் ரஜினி பாட்ஷா தான்.. சூப்பர்ஸ்டாரும் உயரிய விருதுகளும்!

    |

    சென்னை: குழந்தைக்கும் உன் ஸ்டைல்.. இளசுக்கும் உன் ஸ்டைல்.. பெருசுக்கும் உன் ஸ்டைல் என சிவாஜி படத்தின் பாடலில் வருவதை போலவே தனது சினிமா வாழ்க்கையை வாழ்ந்து அசத்தி வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

    உலக சினிமாவிலேயே இவரை போல ஸ்டைல் பண்ண யாரும் இல்லை என பல பிரபலங்களால் புகழப்பெற்ற ஸ்டைல் சாம்ராட் ரஜினி தான்.

    ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது...தொலைபேசியில் வாழ்த்திய முதல்வர் !ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது...தொலைபேசியில் வாழ்த்திய முதல்வர் !

    கிட்டத்தட்ட 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் தன்னிகரில்லா நடிகராக விளங்கி வரும் ரஜினிகாந்துக்கு கிடைத்த உயரிய விருதுகள் குறித்து இங்கே காண்போம்.

    விருதுகளும் கெளரவங்களும்

    விருதுகளும் கெளரவங்களும்

    நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீராகவேந்திரா, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், மூன்று முகம், தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என ஏகப்பட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை குவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு உயரிய கெளரவங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    கலைமாமணி விருது

    கலைமாமணி விருது

    1984ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக கலைமாமணி விருது தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. 1989ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பாக எம்.ஜி.ஆர் விருதும் நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

    பத்ம விருதுகள்

    பத்ம விருதுகள்

    இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த 2000ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் நடிகர் ராஜ்கபூர் விருதை ரஜினிக்கு வழங்கி கெளரவப்படுத்தியது. 2011ம் ஆண்டு எம்ஜிஆர் - சிவாஜி விருது தமிழக அரசு வழங்கியது. 2016ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

    சர்வதேச விருது

    சர்வதேச விருது

    2014ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சினிமா விருது விழாவில் நூற்றாண்டுக்கான சிறந்த இந்திய நடிகர் விருது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது. மேலும், 2016ம் ஆண்டு ஆந்திராவில் வழங்கப்படும் என்.டி.ஆர் தேசிய விருதான நந்தி விருதும் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

    தாதாசாகேப் விருது

    தாதாசாகேப் விருது

    கடந்த 2019ம் ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஐகான் ஆஃப் கோல்டன் ஜுபிளி விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்திய சினிமா துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் மட்டும் அல்ல பதக்கம் வெல்வதிலும் ரஜினி பாட்ஷா தான்!

    English summary
    Super Star Rajinikanth’s honors and awards complete list is here. He achieved Padma Bushan and Padma Vibushan and much more higher Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X