Jailer 1st half review: ஆமை வேகத்தில் நகரும் ஜெயிலர் முதல் பாதி கதை.. நெல்சன் தல தப்புமா?
சென்னை : நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வஸந்த் ரவி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாதி முழு விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. வார நாளில் படம் ரிலீஸாகியிருக்கின்றபோதிலும் தியேட்டர்களில் நிற்கக் கூட இடமில்லை.

ஜெயிலர் படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல, கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் முதல் பாதி விமர்சனம்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான ஜெயிலர் படத்தின் முதல் பாதியின் ஆரம்பம் ஆமை வேகத்தில் செல்கிறது. மனைவி, மகன், மருமகள், பேரன் என சாதாரணமாக வாழ்க்கையை ரஜினி வாழ்ந்து வருகிறார். கூடையை தூக்கிக்கொண்டு காய்கறி வாங்குவதும், புதினா சட்னி கேட்பதும், ஷூக்கு பாலிஸ் போடுவத எல்லாம் ரஜினிக்கு செட்டாகவே இல்லை.
ரஜினி முதலில் பூனைமாதிரி இருப்பார் பின் சிங்கமாக மாறுவார் என்பதை நிரூபிக்க இப்படி செய்யலாமா நெல்சன் என்று இருக்கையில் அமர்ந்து கொண்டு ரசிகர் மனதிற்கு முணுமுணுத்தது, அந்த விசில் சத்தத்திற்கு மத்தியிலும் காதில் விழுந்தது.
சிரிப்பே வரவில்லை:நெல்சனின் தனி ஸ்டைலே டார்க் காமெடிதான், அது முதல் பாதியில் வொர்க் அவுட் ஆகவே இல்லை. ரஜினியின் கேரக்டரை விவரிக்கவே அரை மணிநேரம் போய்விட்டது. அதன்பிறகு தான் யோகிபாபு வருகிறார். ஆனால், அவரின் நகைச்சுவைக்கு பலர் காசு கொடுத்தாக்கூட சிரிக்கமாட்டோம் என்பது போல இறுக்கமாக வாயை மூடி அமர்ந்து இருந்தனர். ஆனால், வில்லனை பிச்சை எடுக்க வைக்கும் காட்சியில் மட்டும், சிரித்து வைப்போம் என்று சிலர் ஒப்புக்கு சிரித்தனர். ஆக மொத்தம் ஜெயிலர் படத்தின் முதல்பாதியில் நெல்சன் தனது டார்க் காமெடியை தவறவிட்டுள்ளார்.

தவறவிட்டுவிட்டார்: டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை பார்த்துவிட்டு, ஆரம்பமே சும்மா அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தின் முதல்பாதி சும்மா விறுவிறுப்பாக இருந்து யாரையும் சீட்டை விட்டு நகரவிடவில்லை. ஆனால், மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த நெல்சன், சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி முதல் பாதியில் கொடுக்க வேண்டிய சுவாரசியத்தை கோட்டைவிட்டார்.
ஆனால், இன்டர்வெல் காட்சியும் சண்டையும் அட்டகாசமாக உள்ளது. ஒரு மணி நேரமாக என்னடா இது என்று யோசித்த நொந்து போன ரசிகர்களுக்கு இன்டர்வெல் காட்சி செம ட்ரீட்டாக இருந்தது. அடுத்து ஜெயிலர் படத்தின் முழுவிமர்சனத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











