Jailer Public Review: பட்டத்துக்கு ஆசைபடாதீங்க.. ஜெயிலர் பார்த்து திருந்துங்க.. பொதுமக்கள் கருத்து!
சென்னை: Jailer Public Review ( ஜெயிலர் பொதுமக்கள் விமர்சனம்) நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது திரைப்படமாக ஜெயிலர் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடித்த படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் திரையரங்கில் பால் அபிஷேகம் செய்து, பிரம்மாண்ட கட் அவுட் வைத்து, ஆட்டம் பாட்டம் என ஜெயிலர் படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

காலையில் இருந்து ட்விட்டரில் ரசிகர்கள் படம் குறித்த விமர்சனத்தை தெறிக்கவிட்டு இருந்தனர். தற்போது முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பட்டத்துக்கு ஆசைப்படக்கூடாது: ஜெயிலர் படத்தை பார்த்த பிறகாவது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யாருமே ஆசைப்படக்கூடாது. ரஜினி ஸ்டைலாக தனது ரசிகர்களுக்காகவே இந்த படத்தில் நடித்துள்ளார். பழைய படம் போல் இல்லாமல் இந்த படத்தில் நெல்சன் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளார்.
500 நாள் ஓடும்: ஜெயிலர் படம் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர் ஒருவர், என் உசுரு என்ன, என் குடும்பத்தில் இருக்கும் எல்லா உசுரையும் தலைவருக்கு தர தயாராக இருக்கிறேன். என் தலைவரு ஜெயிச்சிட்டாரு... பரமா ஜெயிச்சிட்டோம் என்றார். மேலும் முதல் பாதியே 100 நாள் ஓடும், இரண்டாம் பாதி 500 நாள் ஓடும் என்று தியேட்டர் வளாகத்திலேயே கத்தி அலப்பறை செய்தார்.
பான் இந்தியா மூவினா இது தான்: நெல்சன் தலைவரை வைத்து செதுக்கி இருக்கிறார். படத்தின் இன்டர்வெல் காட்சிக்காகவே படத்தை பார்க்கலாம். இன்டர்வெல் பிளாக்கில் தியேட்டரே அலறியது. பான் இந்தியா மூவி என்றால் இந்த படம் தான். நெல்சன் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருக்கிறார். காமெடி, சென்டிமெண்ட் என பிச்சி எடுத்து இருக்கிறார். ஆக்ஷன் சீக்குவென்சில தலைவர் கலக்கி விட்டார்.

பரவால:முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர் பாட்ஷா படம் மாதிரி இருக்கும் என்று நினைத்து வந்தேன் ஆனால், ஜெயிலர் படம் பேமிலி சப்ஜெக்ட் போல இருக்கிறது. பரவாயில்லை பார்க்கலாம், இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து இருக்கலாம் என்றார்.
படம் பார்த்த தனுஷ்: குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ஜெயிலர் படம் பார்த்தனர். அதே போல தனுஷ் ரோகிணி தியேட்டரில் தனியாக வந்து படம் பார்த்தார். அதே தியேட்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் படம் பார்த்தார்.


Click it and Unblock the Notifications











