Jailer Movie Release : ஜெயிலர் திருவிழா… விடிய விடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாக உள்ளநிலையில் விடிய விடிய தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விஜய் வசந்த், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜெயிலர்: ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் படம் இன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் இருந்து வெளியான காவாலா, ஹுக்கும் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அண்மையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது.
தரமான பேச்சு: இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதும் தொல்லை என்று பேசினார். மேலும், காக்கா கழுகு கதை, குடிக்கு அடிமையாகாதீர்கள் என அடுத்தடுத்து அட்வைஸ் மழை பொழிந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் சொன்ன காக்கா கதை மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
விடிய விடிய கொண்டாட்டம்: ஜெயிலர் திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகள் தமிழகத்தில் ரத்து முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது. இதனால், தமிழகத்தில் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சி இருந்ததால் ரசிகர்கள் விடிய விடிய திரையரங்க வாசலில் பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும், பாட்டுப்பாடியும் ஜெயிலர் படத்தை திருவிழாப் போல கொண்டாடினர். பெங்களுரில் உள்ள லட்சுமி திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், படம் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பெயர் வந்ததும், விசில் அடித்து, கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விற்றுத்தீர்ந்த டிக்கெட்: ஜெயிலர் படம் வெளியாகும் தியேட்டர் வளாகங்கள் முழுக்க தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என களைக்கட்டியுள்ளது. தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 900 திரையில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது. முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.


Click it and Unblock the Notifications











