Jailer Movie Release: ஜெயிலர் இணையத்தில் லீக்கான அந்தக் காட்சி... ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்திலிருந்து தலைவர் எண்ட்ரி கொடுக்கும் காட்சி இணையத்தில் லீக்காகி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

Super star Rajinikanth’s ‘Jailer’ Movie Release Fans leaked Rajini entry scenes

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு : இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலராக முத்துவேல்பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட 24 வருடத்திற்கு பின் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுறவைத்தது.

ஜெயிலர் திருவிழா : ஜெயிலர் படம் தியேட்டர்களில் தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்களை வைத்து ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 900 திரையில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது. முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. படம் நிச்சயம் 1000கோடியை வசூலிக்கும் என்று ரஜினி ரசிகர்கள் படம் வெளியாவதற்கு முன்பே கருத்துக்களை பகிர்ந்து வந்தன.

லீக்கான அந்த சீன்: தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 9 மணிக்கும் ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. ஆனால் மற்ற மாநிலத்தில் காலை 6 மணிக்கே படம் வெளியாகிவிட்டதால், ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் தலைவர் எண்டரி உள்ளிட்ட சில காட்சிகளை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

டைகர் ஆர்டர்: அதில், ரஜினி ஷோபாவில் அமர்ந்து இருக்க, பின்னணியில் தலைவரு நிரந்தரம் என்ற பாடல் ஒலிக்கிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன் அதிர்ச்சியோடு ரஜினியை பார்க்க. கூலாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு, டைகர் ஆர்டர் என்கிறார். இந்த மாஸ் சீன் தான் இடைவேளைகாட்சியாக வருகிறது. தலைவர் டைகராக மாறும் இந்த காட்ச லீக்கானதால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

சீனு ராமசாமி வாழ்த்து: சீனு ராமசாமி தனது ட்விட்டரில், தன்னை நம்பும் தைரியசாலிகளின் ஊக்கமிகுந்த எழுத்தே சிறந்த வெற்றிப்படைப்புகளை கலை உலகிற்கு தருகின்றன. அப்படியொரு மனிதராக இயக்குனர், இளவல் திரு,நெல்சன் திலீப்குமாரை அறிகிறேன். அவரது ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு என் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X