Jailer Twitter Review: ஜெயிலர் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இப்படம் வெளியாகி உள்ளதாலும், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை போன்றவையால். ஜெயிலர் படத்தின் மீதான எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த உள்ளது.

Super star Rajinikanth’s ‘Jailer’ Movie Twitter review in tamil

ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பியது. ஜெயிலர் படத்தின் புக்கிங் பொன்னியின் செல்வன் படத்தை விட அதிகமாக இருப்பதால் முதல் நாளே ரூ.100 கோடி வசூலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிளாக்பஸ்டர்: தமிழகத்தில் படம் 9 மணிக்கு வெளியாக உள்ளது. ஆனால், மற்ற மாநிலத்தில் படம் 6 மணிக்கே வெளியாகி விட்டதால், ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் பார்த்த ஒரு இணையவாசி, ஜெயிலர் படத்தின் முதல் பாதி பிளாக் பஸ்டர் 2வது பையர், ஒட்டுமொத்தத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படம், அனிருத் பிஜிஎம் வேறலெவல், படம் நிச்சயம் மிகப்பெரிய வசூலை பெரும் என பதிவிட்டுள்ளார்.

தலைவரு நிரந்தரம்: மற்றொரு இணையவாசி டைகர் ஆர்டர் என்று ரஜினி ஷோபாவில் அமர்ந்து கொண்டு டைகர் ஆர்டர் என்று சொல்ல, ரம்யா கிருஷ்ணன் அதிர்ச்சியோடு ரஜினியை பார்க்கிறார். இந்த மாஸ் சீன் தான் இடைவேளைகாட்சியாக வருகிறது. தலைவர் டைகராக மாறும் இந்த காட்சி இணையத்தில் லீக்காகி உள்ளது.

4.25/5 ரேட்டிங்: மற்றொரு இணையவாசி ஜெயிலர் படத்திற்கு 4.25/5 ரேட்டிங் கொடுத்துள்ளார். தலைவரின் இன்ரோ சீனி, அனிருத்தின் பிஜிஎம், யோகிபாபுவின் காமெடி திரையில் அனல் தெறிக்கிறது. பாடல்கள், பேமிலி செண்ட்டிமென்ட் என அனைத்தும் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

Super star Rajinikanth’s ‘Jailer’ Movie Twitter review in tamil

ரஜினி/அனிருத் தரமான சம்பவம்: முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர், முதல் பாதியில் நெல்சன் - ரஜினி - அனிருத் தரமான சம்பவம் என பதிவிட்டுள்ளார். ஜெயிலர் படத்திற்கு நல்ல ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது.

Super star Rajini Back: ஜெயிலர் படம் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பர், முதல் பாதி செம, இடைவேளை சண்டை சும்மா தாறுமாறாக இருக்கு, பிளாக் பஸ்டர் இரண்டாம் பாகம், அனிரும் கலக்கிவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இட்ஸ் பேக் என்று பதிவிட்டுள்ளார்.

Super star Rajinikanth’s ‘Jailer’ Movie Twitter review in tamil

குழம்பிய ரசிகர்கள்: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் வில்லனையும் ஜெயிலர் பட வில்லனையும் சேர்த்து, ஜெயிலர் படம் பார்த்த ரசிகர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

வில்லன் இவரா: ஜெயிலர் படத்தில் வசந்த் ரவிதான் வில்லன் பதிவிட்டு சீக்ரெட்டை உடைத்துள்ளார். மேலும், இது முன்னாடியே தெரிந்து இருந்தால், ஓடி வந்து இருப்பேன் என்பது போல,வடிவேலு ஓடிவரும் வீடியோவை பதிவிட்டு கிண்டிலடித்து உள்ளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X