நடிகைகள் பற்றி கிசுகிசு.. பீரை குடிச்சிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்.. ரஜினி பகிர்ந்த சுவாரசிய சம்பவம்!
சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இசைஞானி இளையராஜாவிற்கு இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், நாசர், கார்த்திக், பிரபு என பல நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது ரஜினி, இளையராஜா இருவரும் இளம் வயதில் செய்த அட்டகாசத்தை பற்றி பேசி அரங்கத்தை சிரிப்பு அலையில் மூழ்கடித்தார் ரஜினிகாந்த்.
நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், கமல் பேசியதைத் தொடர்ந்து, பேசிய ரஜினிகாந்த், இளையராஜா பற்றி எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம் இருந்தாலும் சில விஷயத்தை நான் சொல்கிறேன். அதிசயம் மனிதர்களை பற்றி நாம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் படித்திருக்கிறேன். ஆனால் நான் நேரில் கண்ணால் பார்த்த ஒரே அதிசயம் மனிதர் இசைஞானி இளையராஜா தான். இளையராஜா ஒரு மாமனிதராக அவரை பார்க்கிறேன் 50 ஆண்டுகளில் அவரை நிறைய முறை பார்த்திருக்கிறேன். இளையராஜாவை எப்போதும் சாமி என்று தான் அழைப்பேன். ராக தேவி ராக தேவனுக்கு இசைகளை அள்ளி கொடுக்கிறாள். சொல்வதை செய்யும் ஆள் இளையராஜா. இப்பேற்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு படமாக விரைவில் வரவேண்டும், அதற்கு நான் கூட திரைக்கதை எழுத தயாராக இருக்கேன் என மேடையில் கூறினார்

இளையராஜா பேச்சு: இதைத்தொடர்ந்து பேசிய இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரெண்டு நாள் முன்னாடி எனக்கு ஃபோன் செய்து, நாம பண்ணது எல்லாத்தையும் சொல்லப்போகிறேன் என்றார். நீங்க பெல் பாட்டம் போட்டுக்கொண்டு, தொப்புளுக்கு போல பெல்ட் போட்டுக்கொண்டு, கிராப் வைத்துக்கொண்டு, கையில் பட்டையா வாட்ச் போட்டுக்கொண்டு என்னென்ன செய்தோம் தெரியுமா என்றார். (நீ சொன்னதை சொல்லிவிடவா என்று இளையராஜா, ரஜினியை பார்த்து கேட்க, ரஜினி சிரித்துக்கொண்டே சொல்லுங்க என்றார்) அதைத்தொடர்ந்து இளையராஜா, நீங்க, நான், மகேந்திரன் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு குடித்தோம். அரை பாட்டில் பீர் குடித்துவிட்டு நீங்க போட்டா ஆட்டம் இருக்கே அதை பற்றி மேடையில் சொல்லப்போகிறேன் என்றார். நான், உடேனே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க எனக்கு கவலை இல்லை, என இளையராஜா பேசிக்கொண்டு இருக்க, ரஜினி எழுந்து சென்று, இளையராஜாவிடம் இருந்து மைக்கை வாங்கி ரஜினி பேசினார்.
அரைபாட்டில் பீர்: ஜானி படத்திற்கான கம்போசிங் போய்க்கொண்டிருந்தது. நான், இளையராஜா, மகேந்திரன் அனைவரும் இருந்தோம். இரவில் நானும், மகேந்திரனும் கொஞ்சம் டிரிங்க்ஸ் குடித்தோம். இளையராஜாவிடம் கேட்டோம், 'சாமினு'... உடனே அவர்... ம்ம்ம்னு சொன்னார். அரை பாட்டில் பீர் அடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... அய்யயோ, அய்யோ நைட் 3 மணி வரைக்கும். அப்போ மகேந்திரன், ராஜா அந்த பாட்டு இருக்கே என்கிறார்... இவர்... அட சும்மா இருங்க சார்னு சொல்லிட்டு, ஊரில் இருக்கும் கிசுகிசு பத்தி எல்லாம் பேசுகிறார். முக்கியமா ஹீரோயின்கள் பத்தி பேசுகிறார். அண்ணனுக்கு பெரிய லவ், அதுதான் இந்த பாட்டு எல்லாம், இன்னும் நிறைய இருக்கு, எல்லாத்தையும் அடுத்த முறை சொல்கிறேன் என்று ரஜினி சொன்னதும் என்று ரஜினி சொன்னதுமே மொத்த அரங்கமே குலுங்கி சிரித்தது.


Click it and Unblock the Notifications











