Kalaignar 100 event: சூரியன் பக்கத்துல உட்காருங்க.. கலைஞர் சொன்ன அந்த வார்த்தை.. மாஸா பேசிய ரஜினி!

சென்னை: கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞர் உடனான சந்திப்பின் போது நடந்த விஷயத்தை நினைவு ஊர்ந்தார். மேலும், கலைஞரின் கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும் சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் நெருப்பு வரும் என்று அவருக்கே உரிய பாணியில் மாஸாக பேசினார்.

சென்னையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞரை வாழ்த்தி பேசி வருகின்றனர். இதில் பேசிய சூர்யா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞருக்கு, நூற்றாண்டு விழா இன்று, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் விழாக்கோலம் கண்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Super star Rajinikanth speech at the Kalaignar100 Event

இதில் பேசிய சூர்யா, சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியதே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர் என்றார். இதையடுத்து பேசிய தனுஷ், கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. கலைஞர் மறைவைப்பற்றி பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது என்றார்.

ஸ்டார் ரஜினிகாந்த்: இந்த நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞர் கருணாநிதி குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர். சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வைத்தவர் கலைஞர். அவர் மட்டும் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்து இருந்தால், எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார்.

கண்ணில் நெருப்பு: ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. ஆனால் கருணாநிதிக்கு இந்த இரண்டுமே இருந்தது. கருணாநிதியின் கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும். சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் நெருப்பு வரும். சிலர் பேச்சிலல் தன்னுடைய அறிவை காட்டுவதற்காக பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரிகிறதா என்று யோசிக்கமாட்டார்கள். ஆனால் கருணாநிதி அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும், பாமரனுக்கு பாமரனாகவும் பேசக்கூடியவர்

அது தான் கலைஞர்: என் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிறார் என்று சொன்னதும், அந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்வதற்காக சென்றேன். அப்போது ஏன் என்று கேட்டார். எனக்கு தமிழ் பெரிதாக வராது என்றேன். உடனே அவர் சிவாஜி நடித்தால் சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன். யார் நடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன் என்று பதிலளித்தார் அது தான் கலைஞர்.

சூரியன் பக்கத்துல உட்காருங்க: கருணாநிதி ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்க்கும் வழக்கத்தை வைத்து இருந்தார். அது தேர்தல் நேரம் என்பதால், அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டனர். அந்த நடிகர் இரட்டை இலைக்கு என்று சொன்னது அப்போது ட்ரெண்டாகி விட்டது. அன்று மாலை கருணாநிதியுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ஆனால்,கலைஞரோ, அந்த நடிகர் வரவேண்டும் என்று கூறிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது, 'வாங்க என்று அழைத்து காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே, சூரியன் பக்கத்துல உட்காருங்க என்று சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான் என்று கலைஞர் உடனான நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X