Jailer Success - கலாநிதியால்தான் நான் பணக்காரன்..ஜெயிலர் படம் ஆவரேஜ்தான்..என்ன ரஜினியே இப்படி சொல்லிட்டார்..?

சென்னை: Rajini Speech in Jailer Success Meet (ஜெயிலர் சக்சஸ் மீட்டில் ரஜினி பேச்சு) ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் படம் குறித்து பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.

தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைத்திருந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் மொத்தமாக உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது.

Super Star Rajinikanth Speech in Jailer Movie Success Meet

என்ன பரிசு?: படத்தின் வெற்றியை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரும், நெல்சன் மற்றும் அனிருத்துக்கு போர்ஷே கார் வழங்கப்பட்டது. கூடவே இவர்கள் மூன்று பேருக்கும் செக்கு வழங்கப்பட்டது. அந்த செக்கில் ரஜினிக்கு 30 கோடி ரூபாய், நெல்சனுக்கு ஐந்து கோடி ரூபாய், அனிருத்துக்கு இரண்டு கோடி ரூபாய் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

படக்குழுவுக்கும் பரிசு: மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டதை அடுத்து ஜெயிலர் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி அவர்களை நேரில் அழைத்து தங்க நாணயமும், கேடயமும் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு விருந்தும் பலமாக வைக்கப்பட்டது. பரிசை ரஜினிகாந்த் வழங்கினார். அப்போது விழாவில் ரஜினி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

என்ன பேசினார் ரஜினி?: அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததை அடுத்து கலாநிதி மாறன் எங்களுக்கு கார் வழங்கினார். அந்த காரில் அமர்ந்த பிறகுதான் உண்மையில் சொல்கிறேன் நான் பணக்காரன் என்று எனக்கு தோன்றியது. ஜெயிலர் படம் எல்லாம் முடிந்த பிறகு கண்ணனும், செம்பியனும் கலாநிதி மாறனை பார்க்க போயிருக்கிறார்கள்.

அப்போது படம் எப்படி இருக்கு என்று கலா சார் கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணனோ படம் சூப்பர் சார் என்றிருக்கிறார். ஆனால் கலாநிதி கண்ணனிடம் நீ நெல்சனோட நண்பன். அதனால் நீ இப்படித்தான் சொல்லுவ. செம்பியன் நீ சொல்லு படம் எப்படி இருக்கு என கேட்டிருக்கிறார். அதற்கு செம்பியன் படம் சுமார்தான் சார் என்று சொல்லிவிட்டார்.

அபோவ் ஆவரேஜ்: அதேபோல் படத்தின் ரீ ரெக்கார்டிங்குக்கு முன்னதாக நானும் படத்தை பார்த்தேன். உண்மையில் வெளிப்படையாக சொல்கிறேன். படம் அப்போது அபோவ் ஆவரேஜாகத்தான் இருந்தது. ஆனால் அனிருத் தனது இசையால் படத்தை எங்கேயோ தூக்கி கொண்டுபோய்விட்டார். அவரது இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

ஜெயிலர் படத்தை நான் பார்த்த போது அபோவ் ஆவரேஜாகவே இருந்தது. ஆனால், அனிருத் தனது இசையால் ஒரு மேஜிக் செய்துவிட்டார். அவரின் பின்னணி இசை மூலம் படத்தை எங்கேயோ தூக்கி கொண்டு போய்விட்டார். அவரின் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். எனக்கும் அவரது நண்பர் நெல்சனுக்கும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று உழைத்தார். படத்தின் எல்லா பணிகளும் முடிந்த பிறகு படத்தை பார்த்த கலாநிதி என்னிடம் சார் இது 2023 பாட்ஷா சார் என கணித்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகுஇதேபோன்றொரு ஹிட்டைத்தானே அடுத்த படத்துக்கும் எதிர்பார்ப்பார்கள் என்று எனக்கு பயம் அதிகரித்திருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X