அதுக்குள்ள அலப்பறைய ஆரம்பிச்சிட்டாங்க.. தலைவர் 170 டைட்டில் இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 170 படத்தின் தலைப்பு இணையத்தில் கசிந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் 10ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Super star Rajinikanth starr thalaivar 170 movie title leaked on social media

ஜெயிலர் வசூல்: ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் படம் இன்னும் நல்ல வசூலை பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தலைவர் 170: ரஜினி அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பை விறுவிறுப்பாக தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

டைட்டில் இதுவா: இந்நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பு குறித்த தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், தொடர்ந்து ரவுடிகளை வேட்டையாடுவதால் இந்த பெயர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு: இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X