தலைவர் 169 டைட்டில் இதுவா?... தீயாய் வேலை செய்யும் ரஜினி ரசிகர்கள் !

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் ஃபேன் மேட் டைட்டில் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

படத்தின் கதை குறித்து ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தலைவர் 169

தலைவர் 169

ரஜினிகாந்த், கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனை அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. மேலும் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக, சிவ ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும், 'தலைவர் 169' படத்தால் இது சாத்தியமாகி உள்ளதாக கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தலைவர் 169 படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில், சிவகார்த்திகேயன் சிறுவயது ரஜினியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் 169 படத்தில் இரண்டாம் பாதியில் பிளாஷ் பேக் இருப்பதாகவும் இந்த பிளாஷ்பேக் தான் படத்தின் மொத்த கதைக்கும் உயிரோட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் தலைப்பு இதுவா?

படத்தின் தலைப்பு இதுவா?

இந்நிலையில் படத்தில் டைட்டிலுடன் ஃபேன் மேட் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் கோட்சூட்டுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். ஜூலை மாத இறுதியில் தலைவர் 169 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

கே.எஸ். ரவிக்குமார்

கே.எஸ். ரவிக்குமார்

பீஸ்ட் திரைப்படம் கடுமையாக விமர்சனத்திற்குள்ளானதை அடுத்து, தலைவர் 169 படத்தில் கே.எஸ். ரவிக்குமார் இணைந்துள்ளதாகவும், திரைக்கதை அமைப்பில் நெல்சனுடன் சேர்ந்து அவர் பணியாற்றவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் பரவியது. இப்படத்தின் டீசர் அல்லது மோஷன் போஸ்டரை ஆகஸ்ட் மாதம் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X