Rajinikanth: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. மனமுருக வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பதிவு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்தினர். இந்நிலையில் நேற்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் விரைவில் குணமாக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். குறிப்பாக சென்னை வடபழனி கோவில் தொடங்கி, பழனிமலை முருகன் கோவில் வரையிலும், சென்னை வடிவுடையம்மன் கோவில் தொடங்கி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் என தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகள் சௌந்தர்யா தனது கணவருடன் சென்னை வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்நிலையில் மருத்துவர்கள் கூறியதுபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். இந்தத் தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

rajinikanth rajinikanth health rajinikanth fans

தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என வாழ்த்தியவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும். திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும். நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மிது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும். அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர், முதலமைச்சர்: மேலும் தான் விரைவில் குணமடையவும், சீக்கிரமே பூரண நலத்துடன் வீடு திரும்பவும் வாழ்த்திய பிரதமருக்கு நன்றி. மேலும் எனது உடல் நிலை தொடர்பாக தனிப்பட்ட அக்கறை செலுத்தியதற்காகவும் நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

rajinikanth rajinikanth health rajinikanth fans

ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்: மேலும், தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், " நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று மனதார வாழ்த்திய தமிழக எதிர்க்கட்சி தலைவர் நண்பர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ஆம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. வேட்டையன் படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், படத்தில் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார்.

rajinikanth rajinikanth health rajinikanth fans

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X