சிறந்த நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

டெல்லி: சர்வதேச திரைப்பட விழாவில் பொன்விழா அன்று திரையுலகின் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த வகையில் சிறந்த நட்சத்திரத்திற்கான விருது திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழ் சினிமாவின் என்றுமே இளமையான சூப்பர் ஹீரோ என்றால் அது யாருனு சின்ன குழந்தை கூட சொல்லும். அது தான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரை மிஞ்ச யாரையுமே கிடையாது இனிமேல் வரவும் முடியாது.

Super star Rajinikanth to be awarded as ICON of Golden Jubilee

பல கடுமையான பாதைகள் தடைகளை மீறியே தன்னம்பிக்கையுடன் வைரம் போல் தமிழ் சினிமாவில் ஜொலிப்பவர் நம் சூப்பர் ஸ்டார். இன்று இருக்கும் இளம் தலைமுறையினரிடம் போட்டியின்றி என்றுமே முதல் இடத்தை அவர் தக்கவைத்துள்ளார் என்றால் அதற்கு முழுக்க முழுக்க அவரின் விடாமுயற்சியும், திறமையும் தான் காரணம்.

அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு சிறந்த பண்பான தனித்துவமான மனிதர். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தும் சிறிதும் கர்வம் கொள்ளாத ஒரு மாமனிதர்.

அந்த மாமனிதனின் இத்தனையாண்டு திரையுலக சேவையை பாராட்டி கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பொன்விழா 2019ற்கான சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது இந்திய அரசாங்கம். இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் என்னை சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்க இருக்கும் இந்திய அரசாங்கத்திற்கு எனது நன்றிகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார் திரு. ரஜினிகாந்த்.

இந்த செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் அவர்கள் மேலும் மேலும் பல விருதுகள் பெற முற்றிலும் தகுதியானவர். அவரின் இந்த கலை சேவை தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் தேவை. இந்த தலைமுறையினர் மட்டுமின்றி வரவிருக்கும் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் அவர் என்றுமே ஒரு முன்னுதாரணம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X