twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரும் 25-ந் தேதி ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!

    |

    சென்னை : தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது

    சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும்.

    தாதாசாகெப் பால்கே விருது

    தாதாசாகெப் பால்கே விருது

    இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்விருது, தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

    சிவாஜி கணேசன்

    சிவாஜி கணேசன்

    திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

    ரஜினிகாந்துக்கு

    ரஜினிகாந்துக்கு

    தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.

    தேசிய திரைப்பட விழா

    தேசிய திரைப்பட விழா

    டெல்லியில் வரும் 25ந் தேதி தேசிய திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக இந்த விருது வழங்குவது தள்ளிப் போய் கொண்டே இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தனுஷ் தேசிய விருது

    தனுஷ் தேசிய விருது

    நடிகர் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறுகிறார். அதேபோல, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய்சேதுபதி பெறுகிறார். கண்ணான கண்ணனே பாடலுக்கு சிறப்பாக இசையமைத்த இசையமைப்பாளர் டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

    ஒத்த செருப்பு சைஸ் 7

    ஒத்த செருப்பு சைஸ் 7

    நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறந்த ஜூரி விருதையும், கேடி என்கிற கருப்பு துரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெறுகிறார்.

    English summary
    Super star Rajinikanth to receive dadasaheb phalke award at delhi on 25th October.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X