Rajinikanth: டெல்லி கணேஷ் மறைவு.. என்னுடைய நண்பர் இறந்துட்டாரு என துக்கத்தை வெளிப்படுத்திய ரஜினி!
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேது நள்ளிரவும் 11.30 மணி அளவில் காலமானார். இவருக்கு வயது 80. இவரது மறைவுச் செய்தி கேட்டு திரைத்துறையினர் பலரும் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெல்லி கணேஷ் மறைவு தொடர்பாக தனது இரங்கல் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் டெல்லி கணேஷ்ஷை தனது நண்பர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகர்களில் ஒருவராக அறியப்பட்டவர். இவர் நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 81. கடந்த சில தினங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று, நள்ளிரவு ராமாபுரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அவரது மறைவு தமிழ் சினிமா உலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கணேஷ் தூத்துகுடி மாவட்டம் வல்லநாட்டில் கடந்த 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் நாடகங்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்த டெல்லி கணேஷ், அதிகப்படியான நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். அதன் பின்னரே சினிமாவில் நடிக்க வந்தார். இவரை பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே கூறியதைப் போல் இவர் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது.
நாடக சபா: டெல்லி கணேஷின் இயற்பெயர் கணேஷ் மட்டும்தான். இவரது பெயருடன் டெல்லி இணைய முக்கிய காரணம், இவர் டெல்லியில் மிகவும் 1960 கால கட்டங்களில் இருந்து மிகவும் புகழ் பெற்ற நாடக சபாவாக இருந்த தக்ஷனா பாரத் நாடக சாபாவில் இணைந்து நடிக்கக் கற்றுக் கொண்டார். மேலும் அந்த நாடக சபாவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட பல்வேறு நாடகங்களில் நடிக்கவும் செய்தார்.
இறுதி மரியாதை: அப்பாவுக்கு இப்போதுதான் 80 வயது ஆகின்றது. அவருக்கு அண்மையில்தான் நாங்கள் சதய விழா நடத்தினோம். நன்றாகத்தான் இருந்தார். இடையில் கொஞ்சம் வயது மூப்பின் காரணமாக சில அறிகுறிகள் அவரது உடல்நிலையில் மாற்றங்கள் காணப்பட்டது. அதற்காக நாங்களும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். நேற்று இரவு அவருக்கு மாத்திரை கொடுக்கலாம் என்ற நிலையில், அவரிடம் போனோம். அப்பாவை எழுப்ப முயற்சித்தோம், ஆனால் அவர் அசைவில்லாமல் இருந்தார். உடனே மருத்துவரை வரச்சொல்லி, பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. நாளை அதாவது நவம்பர் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் அவருக்கு இறுதி மரியாதை செய்யவுள்ளோம் என அவரது மகன் கூறினார்.
ரஜினிகாந்த்: இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் பதிவில், "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











