Vettaiyan Audio Launch: வெறித்தனமாக ரிகர்சல் செய்யும் அனிருத்.. தலைவர்னா உசுரயே குடுப்பாரு போல!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'ஹண்ட்டர் வன்ட்டார்' பாடலைப் பாட அனிருத் வெறித்தனமாக ரிகர்சல் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது அனிருத் எரா என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு, டாப் கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகின்றார். தமிழ் சினிமாவைக் கடந்து, ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களிலும் தொடர்ந்து இசை அமைத்து வருகின்றார். இன்றைய இணைய உலகத்திற்கு ஏற்ற வகையில், அதாவது ரீல்ஸ்களில் அதிகம் இடம் பெறும் அளவிற்கு வேகமான பீட்ஸ் பாடல்களை கொடுத்து இந்த எராவை தனதாக்கி அரியாசனம் அமைத்து அமர்ந்துள்ளார்.

வேட்டையன் படத்தில் இருந்து முதலில் வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஹண்ட்டர் வண்ட்டார் பாடலும் ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றது. ஏற்கனவே வெளியான ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு மாஸ் ஓப்பனிங் பாடலாக ஹுக்கும் பாடலை அமைத்துக் கொடுத்தார். அந்த பாடலும் ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக அந்த பாடலின் வரிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அனிருத்: அதே வரிசையில், ஹண்ட்டர் வண்ட்டார் பாடலும் இடம் பெறும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஹண்ட்டர் வண்ட்டார் பாடலைப் பாட, நரம்பு புடைக்க ரிகர்சல் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், " இசை அமைப்பாளர் அனிருத், தலைவருக்காக (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) உயிரையே கொடுத்துடுவார் போலயே" என கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











