Vettaiyan audio launch: வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரசிகர்கள் ஆரவாரம்!
சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன் தொடங்கி உள்ளது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரங்கத்தில், சூப்பர் ஸ்டாரின் பாடல் ஒலிபரப்பாகி வர,ரசிகர்கள் விசில் அடித்து இதை திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.

வேட்டையன்: ஜெயிலர் படத்தில் அட்டகாசமாக இசையமைத்து தெறிக்கவிட்ட அனிருத் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் வைப் செய்ய வைத்தது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு இந்த இந்த பாடலுக்கு ஏற்றபடி ஆட்டம் போட்டு, பலர் சமூக வலைத்தளத்தில் பலர் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர். இதையடுத்து, வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'Hunter Vantaar' பாடல் வெளியானது.
கலைகட்டிய விழா: இந்நிலையில், தற்போது வேட்டையன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில்,வேட்டையன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ரஜினி கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அனைவரையும் பட்டு பட்டுனு என்கவுண்டரில் போட்டுதள்ளி வருகிறார். முன்னோட்ட காட்சி இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ரஜினியின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கடந்த முறை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு, காகம் கதை பேசுபொருளாகி இணையத்தில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியதால், இந்த முறை அவர் என்ன பேச போகிறார் என அவரது ரசிகர்கள் ஆவர்வமுடன் உள்ளனர். இசைவெளியீட்டு விழாவின் ரஜினிகாந்தின் எவர் கிரீன் பாடலான, வந்தேன்டா பால் காரன் பாட்டு போடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைப் செய்து ரசித்து பார்த்து ஆட்டம் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











