Vettaiyan: எட்டுத்திக்கும் பாராட்டு மழை.. வேட்டையாடிய தலைவர்..ரசிகர்களோடு வேட்டையன் பார்த்த படக்குழு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று அதாவது, அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் வேட்டையன். படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால் ஆன்லைனில் படத்துக்கான புக்கிங் தொடங்கியவுடனேயே முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது. படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடலும், ஹண்டர் வண்டார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் படக்குழு செம மகிழ்ச்சி அடைந்தது. இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தினை படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளனர்.

படம் பார்த்துவிட்டு வந்த பல ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது. படத்தில் மிகவும் முக்கியமான சமூகக் கருத்து பேசப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் இந்தப் படத்தை பார்க்கவேண்டும். படத்தில் நீட் தேர்வு மரணங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் துஷாராவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக பல மாஸ் சீன்களும் இடம் பெற்றுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

rajinikanth vettaiyan

விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாவே ரஜினியையும் அவரது ரசிகர்களையும் சீண்டி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு இணையத்தில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும். அதேபோல் அக்டோபர் 10ஆம் தேதி முதலில் கங்குவா ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் வேட்டையனும் அதே தேதியில் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் கங்குவா நவம்பருக்கு தள்ளிப்போனது. இது சூர்யா ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்ததால், அவர்களும் வேட்டையன் படம் குறித்து தவறான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ப்ரீ புக்கிங்: படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த 6ஆம் தேதியே தொடங்கியது. புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் புக் ஆனது. அதேநேரத்தில் புக்கிங் தொடங்கப்பட்ட இடத்தில் எல்லாம் மதியம் 12 மணி காட்சிகளுக்குத்தான் தொடங்கப்பட்டது. இதனால் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் நாடு அரசு காலை 9 மணிக் காட்சிக்குத்தான் அனுமதி அளித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்திருந்தால், விஜய் ரசிகர்கள் கோட் படத்திற்கு ஏன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருக்கக் கூடும் என்ற பேச்சு எழுந்தது.

rajinikanth vettaiyan

வேட்டையன் டீம்: இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த திரைத்துறையினர் படத்தினை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தலைநகர் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான திரையரங்கமான ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்களை படத்தில் நடித்த நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். மேலும், அந்தப் புகைப்படத்தில் இயக்குநர் த.செ. ஞானவேல், நடிகைகள் அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா உள்ளிட்டோர் உள்ளனர். இது தொடர்பான வீடியோவும் புகைபப்டங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X