வேட்டையன் முதல் பாடலை யார் பாடியது தெரியுமா? சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான மனசிலாயோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் சற்று முன் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் நாளை ஒன்பதாம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். . 'மனசிலயோ' என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன்: ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் இறுதியாக வெளியான ஜெயிலர் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் 'வேட்டையன்' திரைப்படத்திற்கும் சிறந்த பாடலையும், பின்னணி இசையையும் அனிருத் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாடியது யார்: வேட்டையன் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 9 அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மனசிலாயோ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலின் சில வரிகளை பாடகர் பாடுவதுபோல் வெளியிட்டு, அதை பாடியது யார் என கண்டுபிடிக்குமாறு லைகா புரொடக்ஷன்ஸ் கேட்டுள்ளது. இதற்கு பலரும் எஸ்பிபி போல தெரிகிறது என்று கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் முதல் பாடலின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.
முதல் சிங்கிள் கிளிம்ஸ் வீடியோ: அதில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக புகழ்பெற்ற மலேசியா வாசுதேவனின் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் கொண்டு வருகிறோம். வேட்டையன் படத்தின் மனசிலாயோ முழுப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு கேட்டு மகிழுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. வேட்டையன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











