Vettaiyan: வேட்டையனில் ராணா டகுபதி.. என்ன கதாபாத்திரம் தெரியுமா? கெட்டப்பே மாஸா இருக்கே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
படத்தின் கதாபாத்திரங்களை படகுழு அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது, செப்டம்பர் 18ஆம் தேதி, வேட்டையனில் நடித்துள்ள ராணா டகுபதியின் கதபாத்திரத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில வாரங்களுக்கு முன்னர் படத்தில் தனது டாப்பிங் பணிகளை முடித்தார். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திப்போவதாக சூர்யா தெரிவித்திருந்தார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஏற்கனவே படத்தில் இருந்து மனசிலாயோ பாடல் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் நுழைந்தாலே, மனசிலாயோ பாடலின் ரீலீஸ் வீடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றது. ஏற்கனவே படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

கதாபாத்திரம்: இதில் நடிகை ரித்திகா சிங், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருகின்றார். படத்தில் இவரது பெயர் ரூபா என படக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் படத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் டீச்சர் கதாபாத்திரத்தில் சரண்யா என்ற வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், தாரா என்ற கதாபத்திரத்தில், நடித்துள்ளார்.

ராணா டகுபதி: இந்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது ராணா டகுபதி கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவரது கெட்டப் மிகவும் மாஸாக இருப்பதால், இவரும் படத்தில் ஒரு வில்லனாக இருக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

கூலி: இதுமட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார். கூலி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயர் தேவா என படக்குழுவே அறிவித்தது. படத்தின் டீசர் அடுத்த சில வாரங்களில் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கூலி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











