Vettaiyan Box Office Day 1: கோட் படத்தை ஓரம் கட்டுமா தலைவரின் வேட்டையன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை, ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 170வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. இந்நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இந்தப் படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படக்குழு சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடலும் ஹண்டர் வன்ட்டார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையத்தில் எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் மனசிலாயோ பாடலுக்கு ரீல்ஸ் நடனம் ஆடி வெளியிட்டு பாடலை உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

rajinikanth vettaiyan vettaiyan box office

படத்தின் புக்கிங் கடந்த 6ஆம் தேதியே தொடங்கியது. ஆனால் புக்கிங் தொடங்கப்பட்ட இடத்தில் எல்லாம் மதியம் 12 மணி காட்சிகளுக்குத்தான் தொடங்கப்பட்டது. இதனால் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் நாடு அரசு காலை 9 மணிக் காட்சிக்குத்தான் அனுமதி அளித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்திருந்தால், விஜய் ரசிகர்கள் கோட் படத்திற்கு ஏன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருக்கக் கூடும் என்ற பேச்சு எழுந்தது.

சிறப்புக் காட்சி: இந்நிலையில் நேற்று காலை 9 மணிக் காட்சிக்கு அனுமதி கிடைத்ததும், ரசிகர்கள் டிக்கெட்டுகளை உடனடியாக புக் செய்தனர். சென்னை ரோகினி திரையரங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்தது. இதுமட்டும் இல்லாமல் இந்தத் தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் வெளியானது. ஆனாலும் படம் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 ஸ்கீர்ன்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

rajinikanth vettaiyan vettaiyan box office

வசூல் வியூகம்: அதேபோல் தெலுங்கு திரையுலகில் இருந்து ராணா, இந்தி திரையுலகில் இருந்து அமிதாப் பச்சன், மலையாள சினிமாவில் இருந்து ஃபகத் ஃபசில் மற்றும் மஞ்சு வாரியர் என படத்தின் வசூல் மற்ற மாநிலங்களிலும் இருக்க பல மல்டி ஸ்டார்களும் படத்தில் இடம் பெற்றிருப்பதால் படத்தின் முதல் நள் வசூல் மட்டும் இல்லாமல், படத்தின் ஒட்டுமொத்த வசூலிலும் இது பிரதிபலிக்கும் என படக்குழு நம்புகின்றது.

முதல் நாள் வசூல்: ஏற்கனவே வெளியான ட்ரைலரில் அனைத்து நடிகர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுக்க அது விமர்சிக்கப்பட்டதால், உடனே ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமிதாப் பச்சன் குரலே படத்தில் சேர்க்கப்பட்டது. படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளதால் படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 130 கோடிகள் முதல் ரூபாய் 150 கோடிகள் வரை ரிலீஸ் ஆகும் என படக்குழு நம்புகின்றது. படக்குழுவின் நம்பிக்கையைப் போல் வேட்டையன் படம் வசூல் செய்தால் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெறும். ஏற்கனவே முதல் நாளில் கோட் படம் ரூபாய் 126.32 கோடிகளை அள்ளி சாதனை படைத்தது. அதனை வேட்டையன் படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

rajinikanth vettaiyan vettaiyan box office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X