Vettaiyan: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. வேட்டையன் ‘மனசிலாயோ’ பாடல் அப்டேட் வந்துடுச்சு.. சரவெடி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் எப்போது ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் ஜெய்லர். அந்தப் படத்திற்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் கமிட் ஆன படம் வேட்டையன். இதற்கிடையில் லால் சலாம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடித்துள்ள படமான வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரத்தில் படத்தில் தனது டாப்பிங் பணிகளை முடித்தார். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திப்போவதாக சூர்யா அறிவிக்கும்போது மிகவும் முக்கியமான விஷயங்களைப் பேசினார்.

கங்குவா: குறிப்பாக, " கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டார்க்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும்" எனக் கூறினார். இதுகுறித்து கேட்டபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார்.

கூலி: இதுமட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார். கூலி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயர் தேவா என படக்குழுவே அறிவித்தது. படத்தின் ட்ரைலர் அடுத்த சில வாரங்களில் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மனசிலாயோ ரிலீஸ் தேதி: இதற்கிடையில் மனசிலாயோ பாடல் உருவாக்கத்தின்போது, மறைமுகமாக யாரோ எடுத்த வீடியோ, இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினருக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில் படக்குழு படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











