Vettaiyan: ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரஜினிகாந்தின் வேட்டையன்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை ஜெய்பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,மலையால சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் படம் சில ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. இப்படி இருக்கும்போது, படத்தில் இருக்கக்கூடிய மைனஸ் என்ன என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடித்து வேட்டையனுக்கு முன்னர் ரிலீஸ் ஆன படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு பல எண்ட்ரி காட்சிகளும், பல மாஸான காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் ஜெயிலர் படத்திற்கு அடுத்து வரும் வேட்டையன் படமும் ஜெயிலர் படத்தை விட மாஸாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் சூப்பர் ஸ்டாருக்கு மாஸான காட்சிகள் படத்தின் திரைக்கதையில் இடம் பெற்றிருந்தாலும், அது திரையில் சரியாக ஒர்க்-அவுட் ஆகவில்லை.

rajinikanth vettaiyan

படத்தில் வில்லன் என்றால் அது, ராணா டகுபதிதான். ஆனால் அவரது கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக கட்டமைக்கப்படவில்லை. மேலும் அதிகாரத்துடனும் அரசாங்கத்துடனும் நேரடி தொடர்பில் இருக்ககூடிய ஒருவரை இன்னும் மோசமான வில்லனாக, அதிகாரம் பொருந்திய பலம் வாய்ந்த வில்லனாக கட்டமைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

rajinikanth vettaiyan

அதேபோல் ரஜினியைக் கொல்ல வெளிநாட்டில் இருந்து ஒரு கதாபாத்திரம் வருகின்றது. அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் என்னவென்றுகூட ரசிகர்களுக்கு சொல்லப்படவில்லை. மேலும் அவரது கதாபாத்திரமும் பலமானதாக இல்லை. படத்தில் இருக்கக் கூடிய மஞ்சு வாரியரின் கதாபாத்திரமும் ரக்‌ஷனின் கதாபாத்திரமும் படத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.

rajinikanth vettaiyan

அனிருத்தின் இசை படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றே கூறவேண்டும். ரஜினியைத் தவிர வேறு யாருக்குமே பின்னணி இசை என்பது ரசிகர்களின் மனதில் நிலைக்கும் வகையில் இல்லை. அனிருத் இன்னும் படத்திற்கு நல்லபடியாக பின்னணி இசை அமைத்திருக்கலாம் என ரசிகர்கள் புலம்புகின்றனர். ஹண்டர் வண்டார் பாடலில் வரும் இசையையே படம் முழுவதும் ரஜினிக்கு பின்னணி இசையாக, படத்தின் திம் மியூசிக்காகவும் பயன்படுத்தியுள்ளது சலிப்பை ஏற்பத்தும் வகையில் உள்ளது.

rajinikanth vettaiyan

படம் முழுக்க முழுக்க இன்வஸ்டிகேஷனாகச் செல்லுவதால், மிகவும் டிவிஸ்ட் அண்ட் ட்ரன்னிங் இருந்தாலும் அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும் இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையிலும் அந்த இன்வஸ்டிகேஷன் இல்லை. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சலிப்பு ஏற்படச் செய்கின்றது. படத்தின் க்ளைமேக்ஸை படத்தின் இடைவெளியிலேயே சொல்லிவிடுவதால் ரசிகர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமூட்டும் திரைக்கதையை ஏற்படுத்தியிருக்கலாம். மொத்தத்தில் படம் ஆவரேஜான படம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X