வேட்டையன் டிஸாஸ்டரா? எல்லாமே பொய்.. ரஜினி இஸ் த மாஸ்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட தியேட்டரில் வேட்டையன் படம் இன்று வெளியானது. மற்ற மாநிலத்தில் காலையில் 4 மணிக்கு படம் திரையிடப்பட்ட நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் கூறி வந்தனர். ஆனால், இணையத்தில் வேட்டையன் டிஸாஸ்டர் என்று ஹாஸ்ட் டிராக் டிரெண்டாகி வருகிறது. அதில், படம் பார்த்தவர்கள் படம் செம மொக்கை என்றும், இப்படி ஒரு படத்தை எடுக்காமலே இருந்து இருக்கலாம் என்ற கருத்துக்களை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

vettaiyan public review

வேட்டையன் டிஸாஸ்டரா?: உண்மையில், சில ஆகாத இணையவாசிகள் செய்த வேலை இது, தமிழகத்திலேயே படம் 9 மணிக்குத்தான் ரிலீஸ் ஆகி இருக்கு, ஆனால் 6 மணிக்கு எல்லாம் படம் மோசம் என்று மக்கள் கருத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது யாரோ ஆகாதவர்கள் பார்த்த வேலை என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினி இஸ் த மாஸ்: இதையடுத்து, வேட்டையன் படம் பார்த்த ரசிகர்கள், இந்த படம் ரொம்ப நல்ல படம், இயக்குநர் த. செ. ஞானவேலின் கான்செப்ட் இந்த படத்திலும் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் தலைவர் ரஜினி இருக்கிறார். படம் அல்டிமெட், என்னைக்குமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார். ரஜினி இஸ் த மாஸ் என்றார்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்: மேலும், படம் பார்த்த மற்றொரு ரசிகர் குறி வெச்சா இறை விழும் அப்படிப்பட்ட படம் இது, இந்த படத்தை அனைவருமே தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய படம். இந்த படம் எதை சொல்கிறது என்றால், நீட் தேர்வில் நடக்கும் ஊழலை அப்பட்டமாக இயக்குநர் கூறியிருக்கிறார்.. ஏழை மக்களுக்கு சரியான முறையில் கல்வி போய் சேருவது இல்லை. படிப்பு என்று பொய் சொல்லி லோன் கொடுத்து மக்கள் ஏமாற்றப்படுவதை வேட்டையன் படம் சொல்லி இருக்கிறது. மக்களுக்காக நல்ல கருத்தை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அனைவரும் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை பார்க்க வேண்டும். தமிழ் நாட்டில் மட்டுமில்லை ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த படம் ஹிட்டடிக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X