மகளால் வந்த பிரச்னையா? ரஜினிக்கு விபூதி அடிக்க பார்க்கிறதா லைகா? வேட்டையன் படத்தில் புது சிக்கல்!

சென்னை: ஜெயிலர் படம் கொடுத்த தாறுமாறான வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம் வேட்டையன். இயக்குநராக தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் சூழலிலேயே அதிர்வை ஏற்படுத்திய இயக்குநர் தா.செ. ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படமான வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகர் பட்டியலில் இருக்கக்கூடிய பகத் பாசில், பாகுபலி படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ராணா, அவ்வளவுதான் முடங்கி விடுவார் என நினைத்துக் கொண்டிருக்கையில் ஹவ் வோல்டு ஆர் யூ என்ற படத்தின் மூலம் பிரம்மாண்டமான கம் பேக் கொடுத்த மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Rajinikanth Vettaiyan Aishwarya Rajinikanth

முடிந்த படப்பிடிப்பு: சென்னை மும்பை திருநெல்வேலி திருவனந்தபுரம் என இந்தியாவின் பல்வேறு இடங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நிறைவு பெற்றது. இதை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. படம் ஏற்கனவே அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என லைகா நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகளும் பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Rajinikanth Vettaiyan Aishwarya Rajinikanth

தலைவர் 171: வேட்டையன் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதன் பின்னர் கமிட்டான தனது 171 வது படமான கூலி படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மேலும் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறார் என்ற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, கூலி படத்திற்கான லுக் டெஸ்ட் நடைபெற்றது தொடர்பான புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். மேலும் ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். லுக் டெஸ்ட்டில் வெளியிடப்பட்ட சூப்பர் ஸ்டாரைப் பார்க்கும்போது காலா படத்தில் ரஜினி இருந்ததைப் போல் இருக்கின்றார். இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கின்றார். அனிருத் ஒவ்வொரு படத்திற்கும் சூப்பர் ஸ்டாருக்காக இறங்கி வேலை பார்ப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

Rajinikanth Vettaiyan Aishwarya Rajinikanth

இசை வெளியீட்டு விழா: எப்படியோ வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி விட்டதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை லைகா நிறுவனம் கூடிய சீக்கிரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது எனவும் இந்தியன் 2 படத்திற்கு எப்படி லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்ததோ அதேபோல் வேட்டையன் படத்திற்கும் மிகப் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Rajinikanth Vettaiyan Aishwarya Rajinikanth

சம்பளம் பாக்கி: வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பின்னரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்குரிய சம்பளத்தில் லைகா நிறுவனம் பாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ரஜினிகாந்த்துக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி பிரச்னையால் படம் அக்டோபருக்கு ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் திரைத்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா எடுத்த படமான லால் சலாம் படத்தின் மூலம் லைகா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதானால்தான் ரஜினிக்கு சம்பளத்தைக் கொடுப்பதில் லைகா நிறுவனம் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த பிரச்னை சீக்கிரம் தீர்க்கப்பட்டால்தான் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால் வேறு தேதியில்தான் ரிலீஸ் ஆக வாய்ப்பு எனவும் பேசப்படுகின்றது. இது ரஜினி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X