Vettaiyan: வேட்டையனுக்கு அனிருத் கொடுத்த மாஸ் சர்டிஃபிகேட்.. அலப்பறையைத் தொடங்கிய தலைவர் ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் சூப்பர் ஸ்டாரின் 170வது படம் ஆகும். இந்தப் படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அனிருத் தான் இசை அமைக்கும் ஒரு படத்திற்கு முழுவதுமாக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை முடித்த பின்னர், படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேட்டையன் படம் குறித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது அனிருத் எரா என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு, டாப் கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகின்றார். தமிழ் சினிமாவைக் கடந்து, ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களிலும் தொடர்ந்து இசை அமைத்து வருகின்றார். இன்றைய இணைய உலகத்திற்கு ஏற்ற வகையில், அதாவது ரீல்ஸ்களில் அதிகம் இடம் பெறும் அளவிற்கு வேகமான பீட்ஸ் பாடல்களை கொடுத்து இந்த எராவை தனதாக்கி அரியாசனம் அமைத்து அமர்ந்துள்ளார்.

rajinikanth vettaiyan review anirudh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மட்டும் இல்லாமல், தொடர்ந்து மார்க்கெட் உள்ள நடிகராக இன்றைக்கும் உள்ளார். மாஸ் ஓப்பனிங், ரஜினியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பைசா வசூல் என தயாரிப்பாளர்களுக்கு இன்றும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு உள்ளார்.

பாடல்கள்: படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடலும் ஹண்டர் வண்டார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மனசிலாயோ பாடலுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே ஆடுகின்றது எனக் கூறும் அளவிற்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ்கள் குவிந்து வருகின்றது. அதேபோல் ஹண்டர் வண்டார் பாடல் மாஸாக இருந்தாலும், ரசிகர்களைக் கடந்து பொதுமக்களிடம் இன்னும் ரீச் ஆகவில்லை. படம் ரிலீஸ் ஆன பின்னர் இந்தப் பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

rajinikanth vettaiyan review anirudh

வேட்டையன் விமர்சனம்: தர்பார் படத்திற்குப் பின்னர் காவல்துறை அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிப்பதால், இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கின்றது. இதுமட்டும் இல்லாமால், ட்ரைலரில் அனிருத் இசை குறிப்பிடும் படியாக இல்லாததால் ரசிகர்களுக்கு படத்தின் மீது கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

rajinikanth vettaiyan review anirudh

அனிருத் விமர்சனம்: அதாவது அனிருத் தான் இசை அமைக்கும் படங்கள் சிறப்பாக ஜனரஞ்சகமாக இருந்தால் அப்படத்தின் முழு பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்த பின்னர் படம் குறித்து தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் எமோஜிக்கள் மூலம் குறிப்பிடுவார். இதனை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார். அதேநேரத்தில் படம் மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் இல்லை என்றால் அனிருத் கப்சிப் மோடுக்குச் சென்று விடுவார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படம் குறித்து அனிருத் எதுவும் கூறவில்லை. மேலும் படம் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் வேட்டையன் படம் குறித்து தனது எக்ஸ் பதிவில், " டைரக்ட் ஹிட், கிளாப் போர்ட், அப்லாஸ் மற்றும் த்ராஃபி" ஆகியவற்றை பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ரிலீஸ்க்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

rajinikanth vettaiyan review anirudh

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X