இமயமலைக்கு பறந்த ரஜினி.. நெல்சன் சார் என்ன அடிக்கடி லீவு கொடுக்கறீங்கனு கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் அல்லது கோடை விடுமுறையில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியாத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வார கால பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இணையவாசிகள் சிலர் விளையாட்டாக இயக்குநர் நெல்சனை நோக்கி, " என்ன நெல்சன் சார் அடிக்கடி லீவ் கொடுத்துட்டு இருக்கீங்க" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படமான கூலி படம் மிகப்பெரிய தோல்வி படமாக விமர்சன ரீதியாக மாறியது. வணிக ரீதியாக படம் வெற்றிப் படமா தோல்வி படமா என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவிக்கவில்லை. ஆனாலும், படம் வணிக ரீதியாக தோல்விப்படம் இல்லை என்றும், படத்திற்காக செலவு செய்த பணத்தை படம் வசூலித்து கொடுத்து விட்டது என்ற பேச்சும் உலா வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்ததால், படம் பெரிதும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய விமர்சன ரீதியான தோல்விப் படமாக மாறிய இந்த படம் பெரிய டிசாஸ்டர் என்று எல்லாம் விமர்சிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தற்போது ஜெயிலர் 2 படத்தையும் தயாரித்து வருகிறது.
ஜெயிலர் 2: இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் கேரளா மற்றும் கோவாவில் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வார கால பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இணையவாசிகள் சிலர் விளையாட்டாக இயக்குநர் நெல்சனை நோக்கி, " என்ன நெல்சன் சார் அடிக்கடி லீவ் கொடுத்துட்டு இருக்கீங்க" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இமயமலை: மேலும் பலர், கூலி படத்தின் படப்பிடிப்பின் போது கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரது உடல் நலனில் அக்கறை கொண்டு படப்பிடிப்புத் திட்டங்களை படக்குழு மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் அடிக்கடி கால இடைவெளி விட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது என்றும் பேசி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமாகவே இமயமலைக்கு சென்று அங்கு தனிமையில் தனது நேரத்தைக் கழிப்பதை வாடிக்கையாக கொண்டவர் தான். இன்று அவர் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்குகிறார். நாளை பத்ரிநாத் செல்லவுள்ளார், அதன் பின்னர் பாபா குகைக்குச் செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு: தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது பொன் விழா ஆண்டில் வெளியான கூலி படம் சொதப்ப, தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஜெயிலர் 2 படத்தின் மீது உள்ளது.


Click it and Unblock the Notifications











