அடடா கேஜிஎஃப் கூட்டணியில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?.. விரைவில் வெளியாகுமா அறிவிப்பு?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேஜிஎஃப் கூட்டணியோடு இணையவிருக்கிறார் எனவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். பல வருடங்களாக நடித்துவரும் ரஜினி இன்னமும் நம்பர் 1 என்ற இடத்தில்தான் இருக்கிறார். இவர் நடிக்கும் படங்களின் வியாபாரம் பல்லாயிரக்கணக்கான கோடியில் நடக்கக்கூடியவை. ஆனால் இவர் கடைசியாக நடித்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. இதனால் அவருக்கு உடனடியாக ஒரு ஹிட் தேவைப்படுகிறது.

ரஜினிகாந்த்தை காப்பாற்றுமா ஜெயிலர்
எனவே, இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் தற்போது இணைந்திருக்கிறார் ரஜினிகாந்த். இருவரும் இணைந்திருக்கும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துவருகிறார் ரஜினி. படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூருவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ரஜினியுடன் சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அடுத்த படம் யாருடன் செய்கிறார் ரஜினி?
ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை எந்த இயக்குநருக்கு கொடுக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் இயக்குநரான ஞானவேல் இயக்கலாம் என கூறப்படுகிறது. ஜெய்பீம் போலவே இந்தப் படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்படவிருப்பதாகவும், இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் எனவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் எதுகுறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

கேஜிஎஃப் கூட்டணியுடன் சேரும் ரஜினி?
இதற்கிடையே லைகா நிறுவனத்துடனான படத்தை முட்த்த பிறகு ரஜினிகாந்த், கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. கேஜிஎஃப், காந்தாரா என அந்த நிறுவனம் எடுத்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டாகி வசூல் வேட்டை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்துக்கு இயக்குநர் யார்?
ஹோம்பலே ஃபிலிம்ஸ் அடுத்த 5 வருடங்களுக்கு எடுக்கவிருக்கும் படங்களுக்கு 3000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறதாம். எனவே ரஜினியை வைத்து படம் எடுப்பது உறுதி என பலர் கூறுகின்றனர். அதேசமயம் அந்தப் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால், கேஜிஎஃப் இரண்டு பாகங்கள் மூலம் ஹோம்பலே ஃபிலிம்ஸுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைத்துவிட்டது. எனவே அந்தப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீலே ரஜினி படத்தை இயக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











