தள்ளி போ மா.. அம்பானி மகன் திருமண விழாவில் பணி பெண்ணை தள்ளி போக சொன்ன ரஜினி.. கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த், பணிப்பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவருடன் படித்தவரான தொழிலதிபரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இவர்களுடைய திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் அதாவது ப்ரீ வெட்டிங் நிகழ்வு குஜராத்தின் ஜாம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு, உலகில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். இதற்காக ஜாம்நகர் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

Super star rajinikanth worst behaviour with his maid

கலந்து கொண்ட பிரபலங்கள்: மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மைக்ரோசாப்ட நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சிஇஓ பாப் இகர் முதலிய டிஜிட்டல் உலக பிரபலங்களும், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராணி முகர்ஜி, ராம் சரண், அட்லீ முதலிய திரைப்பிரபலங்களும், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, தோனி, பிராவோ, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கிரன் பொல்லார்டு என கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இந்த ப்ரீ வெட்டிங் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் ஜாம்நகர் விமான நிலையத்தில் வந்திருந்தார். அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த ரஜினி மிகவும் எளிமையாக நீல டி ஷர்ட் மற்றும் லோயர் அணிந்திருந்தார். அதே போல மனைவி லதா ரஜினிகாந்த் ஊதா நிற காட்டன் சல்வாரிலும், ஐஸ்வர்யான ரஜினிகாந்த் மட்டும் கொஞ்சர் மார்டன் உடையில் வந்திருந்தார். ரஜினிகாந்தின் ரசிகர்கள் அம்பானி வீட்டு திருமணத்திற்கு என் தலைவன் எப்படி எளிமையாக வந்தாரு என்று பேசினார். சிலர், தன் குடும்பத்துடன் வந்த பணி பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

தள்ளி போ மா: அதாவது ஜாம்நகர் விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சூழ்ந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் அவரை போட்டோ எடுத்தனர். அப்போது, அவருடன் வந்த பணி பெண்ணை தள்ளி போ மா என்று சொல்ல, அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் அந்தபணி பெண்ணை அழைத்து செல்ல, அந்த பெண்ணும் ஏதும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலருமே ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து, நீங்க இப்படி செய்யலாமா என கேட்டு வருகின்றனர்.

பட்டு சட்டை வேஷ்டி: ரஜினிகாந்த் வரும் போதே பஞ்சாயத்தில் சிக்கினாலும், தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டையில் ஸ்டைலா இருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் இருவருமே சிவப்பு நிற உடை அணிந்து இருந்தனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X