Jailer Box Office: ஒரேடியாக படுத்த ஜெயிலர் வசூல்... 12வது நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 12வது நாளில் வசூலில் மொத்தமாக சரிந்துள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ந் தேதி வெளியான படம் ஜெயிலர். ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப்,சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், வெளியான முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.
ஜெயிலர்: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம்,கன்னடம் என உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடியைத் தாண்டிவிட்டதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரூ.700 கோடி வசூலிக்கும்:தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் சராசரியாக 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆக்கிரமிப்புடன் இப்படம் இதுவரை நாடு முழுவதும் 280 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, ஜெயிலர் ரூ.700 கோடி வசூலிக்கும் என்று கணித்துள்ளார்.
வசூல் சரிவு: ஆனால், கடந்த சில நாட்களாக ஜெயிலர் படம் சரிவை சந்தித்து வருகிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்த்த வசூல் ஆகவில்லை.சனிக்கிழமை 20 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 18 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது. திங்கட்கிழமையான நேற்று உலக அளவில் 12.3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஆகமொத்தம் இதுவரை 12 நாட்களில் 484.6 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரியல் ரிப்போர்ட்: ஜெயிலர் படம் 700, 800 கோடியை தொடும் என எதிர்பார்த்த நிலையில், 500 கோடியை தொடவே சிரமப்பட்டு வருகிறது. முதல் வாரத்தை விட அதன் பிறகு வசூல் குறைந்து விட்டதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வரையும், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் 250 கோடி முதல் 290 கோடி ரூபாயும் வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது.
குவியும் விமர்சனம்: உத்தரபிரதேசம் சென்றிருந்த ரஜினிகாந்த், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து அசீர்வாதம் வாங்கினார். இதற்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பி, படுமோசமான கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் ஜெயிலர் படத்தின் வசூலை பாதித்துவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











