அவ்வளவுதான் சோலி முடிஞ்சு.. மொத்தமா ஊத்திக்கொண்ட லால் சலாம்.. டல் அடிக்கும் கலெக்ஷன்!

சென்னை: பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் தியேட்டரில் வெளியான திரைப்படம் லால் சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய் தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த போதும், படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் ஐந்தாவது நாளிலேயே திணறி வருகிறது.

2012ம் ஆண்டு வெளியான த்ரி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு முழுநீள கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார்.

Super star Rajinikanths lal salaam box office collection day 5

மேலும் நிரோஷா, ஜீவிதா, செந்தில் தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளர். ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இது ரஜினிகாந்த படம் தான் என்று விளம்பரங்கள் வந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

லால் சலாம் திரைப்படம்: இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9ந் தேதி வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரஜனிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. அதே சமயம் லால் சலாம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.3.55 கோடி வசூலையும், இரண்டாவது நாளில் ரூ.3.25 கோடி வசூலை வாரிக்குவித்தது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் வசூலை ஈட்ட முடியாமல் திணறியது. இதையடுத்து ஐந்தாம் நாளான நேற்று, வெறும் ரூ.1 கோடியை மட்டுமே வசூலித்து மோசமான நிலையில் தான் உள்ளது. தற்போது வரை லால் சலாம் படத்தின் மொத்த வசூல் 11.13 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

டல் அடிக்கும் கலெக்ஷன்: ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான நட்பைச் சுற்றி வரும் இப்படம், மெத்தனமான கதையாக இருந்தாலும், படம் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் சில பகுதிகள், க்ளைமாக்ஸ் போன்றவற்றில் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்ட போதிலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ஐந்து நாட்கள் ஆகியும் அந்த கலெக்ஷனை எட்டவில்லை. இதே நிலை நீடித்தால், அதை எட்டிப்பிடிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஜெயிலர் நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் மேஜிக்கை லால் சலாம் தவறவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X