வேட்டையன் படம் எப்படி இருக்கு? பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இதோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகெங்கிலும் இன்று திரையரங்குகளில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதனின் வேட்டையன் பட விமர்சனத்தை பார்க்கலாம்.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, அட்டகாசமான வரவேற்பை பெற்றன.

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்: இதில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் ரஜினி காந்த். கல்வியில் எவ்வளவு தில்லுமுள்ளு நடக்கிறது,மோசடி நடக்கிறது என்பததான் படத்தின் கதை. ராணா டகுபதி கல்வித்தந்தையாக வரும் அவர், ஆசிரியர் ஒருவரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க வரும் ரஜினி, அவரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள திட்டம் போடுகிறார். ஆனால், அமிதாப் பச்சன் இதை மறுக்கிறார். இதனால், அமிதா பச்சனுக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் உருவாகிறது.
அனல் பறக்கும் வசனம்: இயக்குநர் த.செ.ஞானவேல் படத்தின் வசனங்கள் அனல் பறக்கும் அதே போல வேட்டையன் படத்திலும், அரசாங்கத்தையும், போலீசையும் வசனத்தால் தெறிக்கவிட்டுள்ளார். பல இடத்தில் ரஜினி பேசும் வசனத்திற்கு திரையரங்கில் கைத்தட்டல் காதை பிளக்கிறது. இதில் துஷாரா விஜயன் பள்ளிக்கூட ஆசிரியராக நடித்துள்ளார். அவரை சுற்றித்தான் கதையே நகர்கிறது. ரஜினியின் மனைவியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளனர். அதே ரித்திகா சிங்கும் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.
ஜெயிலர் படம் போல: ஜெயிலர் படத்தில் ரஜினி ஜெயிலராக நடித்திருந்தார். அதிலும் துப்பாக்கி வைத்து இருந்தார். இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதால், துப்பாக்கி வைத்து இருக்கிறார். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை படத்தின் இயக்குநர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதே போல படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிற்பி செதுக்கியது போல ஞானவேல் செதுக்கி இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
ட்ரோல்: வேட்டையன் திரைப்படம் தமிழகத்தில் சுமார் 800 திரைகளில் 9 மணி முதல் திரையிடப்படுகிறது. ஒரு நாள் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்குத்தான் படமே வெளியாக இருக்கும் நிலையில், பயில்வான் ரங்கநாதன், படத்தை பார்த்தது போல, வேட்டையன் முதல் விமர்சனம் என்று நேற்று இரவே பேசி உள்ளார். வேட்டையன் படத்தின் டிரைலரைப்பார்த்துவிட்டு, ஒட்டியும் ஒட்டாமல் ஒருகதையை சொல்லி இருக்கிறார் என்று இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











