Super Star: “சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு விஜய் பொருத்தமானவர் தான்..” அப்போ ரஜினி..?
சென்னை: விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார்.
அப்போது தொடங்கிய சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து ஜெயிலர் வெளியான பின்னரும் குடுமிபிடி சண்டையாக தொடர்கிறது.
இந்நிலையில் தற்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார் என இன்னொரு பிரபலமும் கொளுத்திப் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தான் சூப்பர் ஸ்டார்: விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் 350 கோடிக்கும் மேல் வசூலித்தது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியிருந்தார். இதற்கு விஜய் இப்போது வரையும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சைக்கு, ஜெயிலர் படத்தின் பாடல்கள் மூலம் சைலண்டாக பதிலடி கொடுத்திருந்தார் ரஜினி. 'ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்', 'ஜுஜுபி' என இந்த இரண்டு பாடல்களின் வரிகளும் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது. அதோடு இல்லாமல் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே நேரடியாக களமிறங்கினார்.

சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியிருந்த ரஜினி, "இதுகுறித்து தனக்கு எந்த பயமும் கிடையாது... இந்த பட்டத்தை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது" என்பது போல பஞ்ச் வைத்தார். மேலும், 'காகம் - பருந்து' என அவர் சொன்ன குட்டி ஸ்டோரி இன்னும் வைரலானது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதாக ரஜினி பேசியது கோலிவுட்டையை அதிர வைத்தது. இதனையடுத்து இந்த விவகராம் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என்ற காலம் எப்போதோ முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு அதிரடியாக கூறியிருந்தார். அதேபோல், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சினிமா விமர்சகர்களும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மியும் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து அதிரடியாக பேசியுள்ளார். அவரது இந்த பேட்டி ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தற்போது அவரது படங்களின் பிஸினஸ், ஓபனிங், வசூல் எதுவும் சொல்லும்படி இல்லை. ஆனால், விஜய்யின் படங்கள் தான் இன்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைக்கின்றன. மேலும், லியோ ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 400 கோடி, ரஜினி 80 கோடி சம்பளம் என்றால், விஜய்யோ 200 கோடி சம்பளத்துக்கு சென்றுவிட்டார். இப்படி எல்லாவிதத்திலும் விஜய் தான் இப்போது வசூல் சக்கரவர்த்தி என்றுள்ளார்.
அதனால், எப்படிப் பார்த்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான அனைத்து பொருத்தங்களும் விஜய்யிடம் உள்ளன. ரஜினியின் ஜெயிலர் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு இங்கே எதுவும் கிடையாது. வணீக ரீதியாக விஜய் சூப்பர் ஸ்டார் எனக் கூறலாம் என அதிரடியாக பேசியுள்ளார் பிஸ்மி. முன்னதாக சீனியர் சினிமா செய்தியாளர் செய்யாறு பாலுவும் இதே கருத்தை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











