Super Star: வசூலில் விஜய்யை அடிச்சிக்கவே முடியாது... ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டும் தான்!
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.
முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையானது.

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியதற்கான பதிலடியாக இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்தும், பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பது பற்றியும் பிரபலம் ஒருவர் பேசிய வீடியோவை ப்ளூ சட்டை மாறன் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினி, நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் காம்போவில் வெளியான இந்தப் படம், ஆல் ஏரியாவிலும் அடித்து நொறுக்குகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினியின் படத்துக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பஞ்ச் வைத்து பேசியிருந்தார் ரஜினி. அதுமட்டும் இல்லாமல் 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரியும் கூறி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். விஜய்யை டார்க்கெட் செய்து தான் ரஜினி இப்படி பேசியதாக கோலிவுட்டில் பெரிதும் பேச்சுகள் எழுந்தன. ரஜினியின் இந்த பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்ப்பும் அதிகளவில் காணப்பட்டது.
அதாவது ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என்ற காலமெல்லாம் முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு அதிரடியாக கூறியிருந்தார். அதேபோல், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சினிமா விமர்சகர்களும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து விமர்சனம் செய்திருந்தனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக தான் ரஜினி சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றி பேசியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து சீனியர் சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. 70 வயதுக்கு மேலாகியும் தனது சூப்பர் டைட்டிலை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பதால் தான், ஜெயிலர் பாடல்களில் வரிகளை அப்படி வைக்க அனுமதித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் காக்கா - பருந்து கதையும் கூறினார். ஆனால், வசூல், ஓபனிங் என பார்த்தால் விஜய் தான் நம்பர் 1 எனவும் அவர் கூறியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரஜினியால் விஜய்யை அடிச்சுக்கவே முடியாது எனவும், உலகம் முழுவதும் விஜய் படங்களுக்கு வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியதற்கு விஜய் மறுப்பு தெரிவித்து இருந்தால் ரஜினி இப்படி பேசியிருக்க மாட்டார். அவருக்கு தளபதி பட்டம் இருக்கும் போது சூப்பர் ஸ்டார் டைட்டில் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











