For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூப்பர் ஸ்டோரி.. பிகில் ராயப்பன் ரோலுக்கே இன்ஸ்பயர் சுஷாந்த் சிங் தானாம்.. சொன்னது யார் தெரியுமா?

  |

  சென்னை: பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, ராயப்பன் ரோல் குறித்த ரகசியத்தை ஓப்பன் செய்துள்ளார்.

  கடந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பிகில்.

  தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லி, விஜய் காம்போவில் வெளியான இந்த படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தியது.

  மூன்றாம் பிறை டு அந்த 7 நாட்கள்.. வைரலாகும் புதிய ஃபர்ஸ்ட் லுக்.. ”வேற லெவல்னா” என பாராட்டிய அட்லி!

  சுஷாந்த் சிங் - பிகில் கனெக்‌ஷன்

  சுஷாந்த் சிங் - பிகில் கனெக்‌ஷன்

  எம்.எஸ். தோனி பயோபிக் மூலம் உலகளவில் பிரபலமான இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசத்தையே உலுக்கியது. சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுஷாந்த் சிங், பிகில் கனெக்‌ஷன் குறித்து அர்ச்சனா அக்கா மனம் திறந்துள்ளார்.

  ராயப்பன் ரோலுக்கு

  ராயப்பன் ரோலுக்கு

  பிகில் படத்தில் தளபதி விஜய்க்கு முதலில் டபுள் ரோலே இயக்குநர் அட்லி திட்டமிடவில்லையாம். ராயப்பன் கதாபாத்திரத்திற்கு மூத்த நடிகர்கள் யாரையாவது வைத்து இயக்கலாம் என்றே திட்டமிட்டு இருந்தார். தயாரிப்பு தரப்புக்கும் அந்த தகவலை அளித்திருந்த நிலையில், சில டாப் நடிகர்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.

  சுஷாந்த் தான் இன்ஸ்பிரேசன்

  சுஷாந்த் தான் இன்ஸ்பிரேசன்

  பின்னர், சுஷாந்த் சிங்கின் 'Chhichhore' படத்தின் போட்டோக்களை பார்த்த படக்குழு, சுஷாந்த் சிங்கின் தந்தை மகன் லுக்கை பார்த்து, அசந்து போய், ஏன் தளபதி விஜய்யை ராயப்பன் ரோலில் நடிக்க வைக்கக் கூடாது என திட்டமிட்டு, பின்னர் உருவானது தான் அந்த மேஜிக்கே என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்துள்ளார்.

  ராயப்பன் ப்ரீக்வல்

  ராயப்பன் ப்ரீக்வல்

  பிகில் படத்தின் ராயப்பன் கதாபாத்திரத்தின் ஆரம்ப கதையை படமாக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் சமயத்தில் இயக்குநர் அட்லியிடம் கேட்டிருந்தனர். அவரும், அதற்கு "செஞ்சிட்டா போச்சு" என 'பிகில்' ராயப்பனின் மாஸ் வசனத்தையே பதிலாக கொடுத்திருந்தார். அர்ச்சனா கல்பாத்தியின் சமீபத்திய பேச்சு, விஜய் ரசிகர்களின் அந்த ஆவலை மீண்டும் தூண்டி இருக்கிறது.

  கடைசி படம்

  கடைசி படம்

  கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் நிதிஷ் திவாரி இயக்கத்தில் வெளியான சிக்கோரே படம் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பயராக இருந்து வருகிறது. இந்நிலையில், சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படமான தில் பெச்சாரா, தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியாகிறது.

  English summary
  Sushant Singh Rajput's two different looks from his film 'Chhichhore' was the inspiration for 'Bigil' Rayappan role. Initially Atlee not planned for dual role for Vijay in Bigil. Archana Kalpathi revealed this secret in a recent interaction.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X